பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் – ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!

0
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் - ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் - ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம் – ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல்!

பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளரான பப்பி லஹிரி இன்று (பிப்.16) உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பப்பி லஹிரி

ஹிந்தி திரையுலகில் 90களில் பிரபலமான இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்தவர் அலோகேஷ் என்ற பப்பி லஹிரி. கடந்த 1973ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமான பப்பி லஹிரி, சல்தே சல்தே, டிஸ்கோ டான்சர் மற்றும் ஷராபி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் ஒரு பாடகரும் கூட.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவுக்கு கணவர் கொடுத்த ஷாக் – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் கடந்த 1985ம் ஆண்டு வெளியான ‘பாடும் வானம்பாடி’ என்ற திரைப்படத்தில் இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 1990களில் டிஸ்கோ இசையை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹிரியையே சாரும். தற்போது 69 வயதான பப்பி லஹிரி கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான ‘பாகி 3’ படத்துக்காக பாங்காஸ் என்ற பாடலை பாடி இருந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி சுஜிதாவின் காதலர் தின கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

இதற்கிடையில் சமீபத்தில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பப்பி லஹிரி மும்பை க்ரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்த அவருக்கு நேற்று (பிப்.15) இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டுமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பப்பி லஹிரி, இன்று (பிப்.16) திடீரென மரணமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு தற்போது பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here