BOI வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!

0
BOI வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
BOI வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
BOI வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம். அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க வருகிற மே 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தொழில்துறைகளில் பாதிப்பு ஏற்பட்டு பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் 10 பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி!

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் bankofindia.co.in என்ற பாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வருகிற மே 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலாவதாக bankofindia.co.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘Careers’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. இதையடுத்து ‘Recruitment of Officers in various streams up to Scale IV- Project No. 2021-22/3 Notice dated 01.12.2021′ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது ‘Apply Online’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக ‘Click here for New Registration’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

4. இதில் தங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி உள்ளிட்டவை கிளிக் செய்ய வேண்டும்.

5. அடுத்ததாக ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கப்படும்.

6. இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து ‘Save & Next’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

7. அதன் பிறகு ‘Validate your details’ என்பதை கிளிக் செய்து மீண்டும் ‘Save & Next’ என்ற பட்டனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும்.

8. இப்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்து ‘COMPLETE REGISTRATION’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9. இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, SUBMIT என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!