டிகிரி முடித்தவர்களுக்கான வங்கி வேலை – முழு விவரங்கள் இதோ…!
BOI AXA Mutual Fund வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Business Development Associate பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணி பற்றிய முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இப்பதிவை முழுமையாக படித்துவிட்டு தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | BOI AXA Mutual Fund |
பணியின் பெயர் | Business Development Associate (BDA) |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOI AXA Mutual Fund பணியிடங்கள்:
BOI AXA Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ள Business Development Associate பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Business Development Associate கல்வி தகுதிகள்:
Business Development Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் AMFI / NISM சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியம்.
Business Development Associate முன்னனுபவம்:
இப்பணிக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
BDA வயது வரம்பு:
Business Development Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Business Development Associate சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
BDA தேர்வு செய்யப்படும் விதம்:
இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
BDA விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இப்பணியின் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.