BOB வங்கியில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!
Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் BC Supervisor பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 30.11.2023 அன்று வரை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Bank of Baroda (BOB Bank) |
பணியின் பெயர் | BC Supervisor |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Bank of Baroda காலிப்பணியிடங்கள்:
BC Supervisor பணிக்கு என 02 பணியிடங்கள் Bank of Baroda வங்கியில் காலியாக உள்ளது.
BC Supervisor கல்வி தகுதி:
Graduate Degree, BE, MCA, MBA, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என பெறப்பட்டு வருகிறது.
BC Supervisor அனுபவம்:
இப்பணிக்கு வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager, Clerk பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
BC Supervisor வயது:
விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
BOB Bank ஊதியம்:
BC Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
NRCB திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-
BOB Bank தேர்வு முறை:
இந்த BOB வங்கி சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB Bank விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.11.2023 அன்றுக்குள் விரைவு தபால் செய்ய வேண்டும்.