தீபாவளி போனஸாக BMW பைக், ஆப்பிள் ஐபோன் – Biz2Credit நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

0
தீபாவளி போனஸாக BMW பைக், ஆப்பிள் ஐபோன் - Biz2Credit நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
தீபாவளி போனஸாக BMW பைக், ஆப்பிள் ஐபோன் - Biz2Credit நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
தீபாவளி போனஸாக BMW பைக், ஆப்பிள் ஐபோன் – Biz2Credit நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

Biz2Credit என்று அழைக்கப்படக்கூடிய பிரபல ஆன்லைன் கடன் வழங்குநர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஆரம்ப தீபாவளி போனஸாக BMW பைக், ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருட்களை அளிப்பதாக சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தீபாவளி போனஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள Biz2Credit நிறுவனம் சிறு வணிகங்களுக்கு நிதி வழங்கும் ஆதாரமாக செயல்பட்டு வருகிறது. அதாவது குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக வணிகத்தில் இருக்கும் சிறு வணிகங்களுக்கு இந்த நிறுவனம் நேரடி நிதி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் நொய்டா, இந்தியா போன்ற நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு ஆசிரியர்கள் & குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு – செப்.5 க்குள் தடுப்பூசி!

இந்நிலையில் Biz2Credit நிறுவனம் இந்திய மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் அனைவருக்கும் வெகுமதிகளையும், சலுகைகளையும் அளிப்பதாக அறிவித்துள்ளது.அந்த வகையில் ஊழியர்களுக்கு 40 மடங்கு போனஸ், BMW பைக், 1 லட்சம் ரூபாய் வரை பண வெகுமதிகளை வழங்க இருக்கிறது. அதாவது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி வரும் ஊழியர்களின் பங்களிப்புகளை பாராட்டும் வகையில் புதிய HR கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக Biz2Credit தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் 20 சதவிகித ஊழியர்களுக்கு 40 மடங்கு ஊக்கத்தொகையை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் ரொக்கப் பரிசுகளுக்கு மேலதிகமாக, ஊழியர்களின் விருப்பப்படி ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனம் கிடைக்கும். இதனுடன் அனைத்து ஊழியர்களுக்கும் ஆப்பிள் iWatch, சைக்கிள் ஓட்டுதலின் ஹெல்த் பேக்கேஜ், தங்க நாணயங்கள் உள்ளிட்ட தீபாவளி பரிசுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தகவல் தொடர்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் அரோரா கூறுகையில், ‘கடந்த ஆண்டு அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இருந்தாலும் எங்கள் ஊழியர்கள் உண்மையான சொத்துக்களானதால் அவர்களுக்கு ஊக்கமளிக்க திட்டமிட்டுள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டின் தொடக்கத்தில், Biz2Credit நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஆதரவாக இடைக்கால ரொக்க போனஸ், மருத்துவ நன்மை திட்டம், வார இறுதி வேலை ஊக்குவிப்பு, பிராட்பேண்ட் மற்றும் தொலைபேசி பில்லை திருப்பி செலுத்தும் வசதிகள், கொரோனா தடுப்பூசி செலவு போன்ற உதவிகளை வழங்கியது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் 300 பணியாளர்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 150 ஊழியர்களை தனது தொழில்நுட்ப குழுவில் சேர்க்க Biz2Credit திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!