BMRC நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஜூலை 7 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
BMRC நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - ஜூலை 7 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BMRC நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - ஜூலை 7 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BMRC நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஜூலை 7 விண்ணப்பிக்க இறுதி நாள்!

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள DGM, Manager, Labour Welfare Officer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BMRC வேலைவாய்ப்பு விவரங்கள்:

Deputy General Manager பணிக்கு என 04 பணியிடங்களும், Manager பணிக்கு என 06 பணியிடங்களும், Labour Welfare Officer பணிக்கு என 01 பணியிடமும் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (BMRC) காலியாக உள்ளது.

Deputy General Manager, Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Safety, Civil, Electrical பாடப்பிரிவில் B.E, B,Tech Degree அல்லது Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.

Labour Welfare Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Post Graduate, PG Diploma அல்லது MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அருமையான பணி வாய்ப்பு – முழு விவரங்களுடன்!

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அனுபவம் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Deputy General Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும், Manager பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும், Labour Welfare Officer பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Deputy General Manager பணிக்கு ரூ.1,40,000/- என்றும், Manager பணிக்கு ரூ.75,000/- என்றும், Labour Welfare Officer பணிக்கு ரூ.50,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BMRC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (07.07.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BMRC Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!