Blood Relation in tamil

0

இரத்த உறவுகள்

இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.இவ்வகை வினாக்கள் தேர்வாளர்களின் தகவல் செயல் திறனை சோதிக்கும் பொருட்டு எளிய உறவுமுறைகளை பல்வேறு உறவுமுறைகளோடு சேர்த்து ஒன்றை ஒன்று தொடர்புபடுத்தியும் வார்த்தைகளில் பெருகூட்டியும் தேர்வாளரை எளிதில் குழப்பும் விதமாக அமைகின்றன. எனவே இக்குழப்பதிற்கு எளிதில் விளங்கும் வண்ணம் உறவுமுறைகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. அப்பாவின் (அ) அம்மாவின் மகன் – சகோதரன் – அண்ணன் (தம்பி)
  2. அப்பாவின் (அ) அம்மாவின் மகள் – சகோதரி – அக்காள் (அ) தங்கை
  3. அப்பாவின் சகோதரன் – சித்தப்பா (அ) பெரியப்பா
  4. அப்பாவின் சகோதரி – அத்தை
  5. அம்மாவின் சகோதரன் – மாமா
  6. அம்மாவின் சகோதரி – சித்தி
  7. அப்பா (அ) அம்மாவின் தாய் – பாட்டி
  8. அப்பா (அ) அம்மாவின் தந்தை – தாத்தா
  9. தாத்தாவின் மகன் – அப்பா (அ) சித்தப்பா (அ) பெரியப்பா (அ) மாமா
  10. பாட்டியின் மகன் – அப்பா (அ) சித்தப்பா (அ) பெரியப்பா (அ) மாமா
  11. தாத்தாவின் ஒரே மகன் – அப்பா
  12. பாட்டியின் ஒரே மகன் – அப்பா
  13. தாத்தாவின் மகள் – அம்மா – அத்தை (இவர்களின் சகோதரிகளும்)
  14. பாட்டியின் மகள் – அம்மா – அத்தை (இவர்களின் சகோதரிகளும்)
  15. தாத்தாவின் ஒரே மருமகள் – அம்மா
  16. பாட்டியின் ஒரு மருமகள் – அம்மா
  17. மனைவியின் சசோதரி – மைத்துனி
  18. மனைவியின் சகோதரன் – மைத்துனர்
  19. கணவனின் சகோதரன் – மைத்துனர்
  20. அண்ணனின் மனைவி – அண்ணி
  21. தம்பியின் மனைவி – மன்னி (அ) மைத்துனி
  22. சகோதரியின் கணவர் – அக்காள் கணவர் (அத்தான்)                                                                                    – தங்கை கணவர் (மைத்துனர்)
  23. சகோதரனின் மனைவி – அண்ணி (அ) மதனி (அ) மைத்துனி
  24. மகனின் மனைவி – மருமகள்
  25. மகளின் கணவன் – மருமகன்
  26. மாமா அல்லது அத்தையின் மகன் (அ) சித்தப்பா மகன் (அ) பெரியப்பா மகன் – திருமண உறவுடைய ஆண் (அ) பெண் (அ) அத்தான் (அ) அத்தங்கள்
  27. சகோதரனின் மகன் – உடன் பிறந்தவரின் மகன்
  28. சகோதரியின் மகன் – உடன் பிறந்தோர் மகன்
  29. சகோதரியின் மகள் சகோதரனின் மகள் – உடன் பிறந்தோர் மகள்

எடுத்துக்காட்டு :

  ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் கூறியது உனது தாயின் கணவனின் சகோதரி எனது அத்தை எனில் அப்பெண் அந்த ஆணுக்கு என்ன உறவு?

  1. A) மாமா B) சகோதரி
  2. C) அம்மா D) அத்தை(அ)மைத்துனி(அ)மதனி

விடை : B

பயிற்சி வினாக்கள் :

  1. ஒரு மனிதனைப் பார்த்து முருகன் இவ்வாறு கூறினார். “அவர் என் சகோதரியின் சகோதரனின் தந்தையின் ஒரே மகன்” எனில் முருகன் கூறிய அவர் யார்?

A)மாமா(அ)சித்தப்பா   B) தந்தை    C) மாமா(அ)பெரியப்பா     D) அவரே

2. கங்காவை அறிமுகம் செய்து ரமேஸ் கூறினார் “அவள் என் அப்பாவின் ஒரே  மகனின் மனைவி” எனில் கங்கா அவரது (ரமேஸ்) அம்மாவிற்கு என்ன உறவு?

A)மகள்         B) மருமகள்          C) சகோதரி மகள்     D) மைத்துனி

3. ஒருவளைப் பார்த்து ஒருவன் சொன்னான். அவள் என் தாயாரின் ஒரே மகள். அந்தப் பெண் அவருக்கு எந்த முறையில் உறவு?

A) பாட்டி           B) அத்தை            C) தாய்               D) சகோதரி

4. ஒருவன் ஒருத்தியை அறிமுகப்படுத்திக் கூறியது “அவளது ஒரே சகோதரன் என்னுடைய அப்பாவின் ஒரே மகன்” என்று கூறினார். அவள் அந்த ஒருவனின் அப்பாவிற்கு எந்த வகை உறவு?

A) மனைவி         B) சகோதரி        C) மகள்             D) மருமகள்

5. ஒரு மனிதனை அறிமுகப்படுத்தி ஒருத்தி கூறினாள் “என் தாயின் தாய்க்கு அவர் ஒரு மகன்”. அந்த ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள உறவு வகை எது?

A) சகோதரியின் மகள்      B) தாய்        C) சகோதரி             D) அத்தை

6. ஒரு பெண் ஒரு ஆணிடம் “நீங்கள் என்னுடைய தாத்தாவினுடைய ஒரே மகனின் மகன்” என்று கூறினாள் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

A) மருமகள்      B) சகோதரி(அ)மனைவி     C) தாய்     D) சகோதரி (அ) மருமகள்

7. ஒரு ஆணைப்பார்த்து ஒரு பெண் கூறுகிறாள் “அந்த ஆண் யார் என்றால் எனது அம்மாவின் அப்பாவின் ஒரே மருமகன்” அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

A) அத்தை        B) மகள்      C) சகோதரி           D) மனைவி

8. ஒரு போட்டோவிலுள்ள ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்“என் அம்மாவின் அப்பாவின் ஒரே மகன்” என்று. அப்படியானால் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

A) மருமகள்       B) சகோதரி      C) தாய்        D) மகள்

9. ஒரு ஆணைக் காட்டி பெண் கூறுகிறார் “எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்” அந்த பெண்ணிற்கு ஆண் என்ன உறவு?

A) மகன்           B) கணவன்    C) மைத்துனர்      D) மருமகன்

10. மேடையில் பரிசு வாங்கிய ஆணைக் காட்டி ஒரு பெண் கூறியது“ அவர் எனது மாமாவினுடைய மகளின் சகோதரன்” எனில் அந்தப் பெண் ஆணிற்கு என்ன உறவு?

A) மகன்       B) உறவினர்    C) மாமா       D) மைத்துனி(அ)மதினி

11. ஒரு ஆணை அறிமுகப்படுத்தி ஒரு பெண் கூறுகிறாள் “அவர் யாரென்றால் எனது அம்மாவின் அம்மாவுடைய ஒரே மகன்” அந்த ஆணிற்கு பெண் என்ன உறவு?

A) தாய்        B) அத்தை  C) சகோதரி        D) உடன்பிறந்தோர் மகள்

12. ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கூறுவதாவது “நீ எனது தாயின் ஒரே மகனுடைய மனைவி” எனில் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

A) சகோதரி    B) அத்தை      C) மகள்         D) மனைவி

13. ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கூறுகின்றான்“அந்தப் பெண் யாரெனில் எனது தந்தையுடைய ஒரே மகனுடைய சகோதரி” அந்த ஆணின் தந்தைக்கு பெண் என்ன உறவு?

A) மகள்         B) மனைவி      C) சகோதரி         D) தாய்

14. ஒரு ஆணைப் பார்த்து பெண் கூறுகிறாள்“அந்த ஆண் யாரென்றால் எனது அம்மாவினுடைய ஒரே மகளுடைய மகன்” அந்த ஆணிற்கு பெண் என்ன உறவு?

A) தாய்           B) மகன்            C) சகோதரி           D) மகள்

15. ஒரு சீமானை தீபக் கூறுகிறார்“எனது மகளுடைய தந்தையுடைய தந்தை தான் அந்த சீமானுக்கு சகோதரன்” எனில் தீபகிற்கு சீமான் என்ன உறவு?

A) மாமா        B) அப்பா            C) தாத்தா              D) அத்தை

இரத்த உறவுகள்

K,L,M,N,O என்ற 5 நபர்கள் வட்டமேஜையில் உணவு உட்கொள்கின்றனர். M இன் தாயார் K. அவரது கணவர் O. K இன் சகோதரன் N. M இன் கணவர் L.

16. K க்கு L என்ன உறவு?

      A) மகன்           B) மருமகன்        C) மாமா             D) அப்பா

17. M க்கு O என்ன உறவு?

      A) அப்பா          B) மகன்              C) மருமகள்        D) மகள்

18. O க்கு N என்ன உறவு?

     A) அப்பா          B) மாமா              C) மைத்துநர்      D) மைத்துனி

19. N க்கு K என்ன உறவு?

      A) சகோதரன்   B) சகோதரி          C) மைத்துநர்      D) மைத்துனி

20.Q வினுடைய தாயார் யார் என்றால் P யின் சகோதரி அவள் M இன் மகள். Pயின் மகள் S என்றால் Tயின் சகோதரி S. Sக்கு M என்ன உறவு?

     A) பாட்டி          B) தாத்தா              C) அப்பா            D)தாத்தா (அ) பாட்டி

21. C யின் தந்தை A. B யின் மகன் D. A யின் சகோதரன் E. அப்படியானால் D யின் சகோதரன் C என்றால் E க்கு B என்ன உறவு?

     A) மைத்துனிஃமதினி      B) கணவன்        C) பேரன்         D) பேத்தி

22. A யின் மகன் E. B யின் மகன் D. Eயும் Cயும் கணவன் மனைவி. Bயின் மகள் C. Eக்கு B என்ன உறவு?

     A) சகோதரன்         B) மாமா           C) மைத்துநர்       D) மைத்துனி

வினா எண் 23 முதல் 25 வரை

Bயின் மகன் A. Bயின் சகோதரி Cக்கு ஒரு மகன். D,E என்ற  மகளும் உள்ளார்கள் Dயுடைய தாய் மாமன் F.                                                                                              23. Dக்கு A என்ன உறவு?

      A) அத்தான்       B) சகோதரியின் மகன்        C) மாமா          D) சகோதரன்

24.Fக்கு E என்ன உறவு?

      A) சகோதரி        B) சகோதரியின் மகள்        C) மகள்             D) மனைவி

25. Fயின் சகோதரியின் மகள் எத்தனை பேர்?

      A) ஒன்றுமில்லை      B) ஒன்று                     C) இரண்டு         D) மூன்று

விடைகள்:

1.D                  2. B                3. D                 4. C                5. A

6.D                  7. B                8. A                9. A                 10.B

11.D                12. D              13. A              14. A                15. A

16.B                17. A               18. C             19. B                20. D

21.A                22.A                23. A              24. B               25. B

Download Blood Relation PDF

To Follow  Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!