இந்தியாவில் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

0
இந்தியாவில் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் 102 யூடியூப் சேனல்கள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

இக்கால இளைஞர்களின் கனவாகத் திகழ்வது யூடியூப் சேனல். நாமும் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி பிரபலமடைய வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசையாக உள்ளது. புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் ரசிகர் படையை விட, சில யூடியூபர்களை பின் தொடருபவர்கள் தான் அதிகம். அந்தளவு ஒரு யூடியூப் சேனல் சாமானியனையும் புகழின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இந்நிலையில் 102 யூடியூப் சேனல்கள் முடக்கபட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யூடியூப் சேனல்கள் முடக்கம்:

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு போன் மூலமாக வீட்டில் இருந்தபடியே நாம் சம்பாதிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் புதியதாக யூடியூப் சேனல் தொடங்கி சம்பாதித்து வருகின்றனர். 3 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை யூடியூப் மூலம் சம்பாதிக்கின்றனர். அதாவது ஆன்லைனில் நேரம் செலவிடுவது, ஒரு விஷயத்தை தெளிவாக விளக்கும் திறமை, வீடியோக்களை எடிட்டிங் செய்யும் திறமை இருந்தால், நிச்சயம் காலப்போக்கில் யூடியூப் மூலம் ஆன்லைனில் சம்பாதிக்க முடியும். இருப்பினும் இந்த யூடியூப் சேனல் மூலம் தவறான செய்திகளும் பரவி வருகிறது.

அந்த வகையில் பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சில யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது. அவ்வப்போது நடந்து வந்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த 18-ந் தேதி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இவற்றில் ஒரு சேனல், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருகிறது. இத்துடன் மொத்தம் 102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக உயர் அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கை மக்கள் – வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை!

அதாவது முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள், இந்திய பார்வையாளர்களை குறி வைத்து பொய்யான செய்திகளை பரப்பி வந்தன. மேலும் மத வெறுப்புணர்வை தோற்றுவித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்டன. உதாரணமாக, இந்தியாவில் அணு ஆயுத வெடி விபத்து நடந்ததாகவும், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டதாகவும், துருக்கி மீது இந்தியாவும், எகிப்தும் இணைந்து படையெடுத்ததாகவும் பொய்ச்செய்தி வெளியிட்டன என கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!