கோபிக்கு வரும் போன் அழைப்பு, சந்தேகப்பட்டு பார்த்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” நாளைய எபிசோட்!

0
கோபிக்கு வரும் போன் அழைப்பு, சந்தேகப்பட்டு பார்த்த பாக்கியா -
கோபிக்கு வரும் போன் அழைப்பு, சந்தேகப்பட்டு பார்த்த பாக்கியா - "பாக்கியலட்சுமி" நாளைய எபிசோட்!
கோபிக்கு வரும் போன் அழைப்பு, சந்தேகப்பட்டு பார்த்த பாக்கியா – “பாக்கியலட்சுமி” நாளைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், நாளைய எபிசோடில் கோபிக்கு இரவு அடிக்கடி போன் வருவதை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. அதனால் போனை பார்க்க அதில் ராதிகா நம்பர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து உலக சாதனை செய்ய அதை பாராட்ட ராதிகா வருகிறார். பின் ராதிகா பாக்கியாவை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைக்க ஆனால் என்னுடைய கணவர் வரமாட்டார் என பாக்கியா சொல்கிறார். பின் அவர் மிகவும் கூச்ச சுபாவம் என சொல்லி பாக்கியா சமாளிக்கிறார். பின் வீட்டிற்கு வந்து ராதிகா கோபியிடம் விவரத்தை சொல்கிறார். அப்போது கோபி இவங்க இருவருக்கும் நடுவே இருக்கும் பாசத்தில் நான் தான் மாட்டிக் கொண்டேன் என நினைக்கிறார்.

இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியாக களமிறங்கும் பிக்பாஸ் நடிகர் – விலகும் அருண் பிரசாத்? காரணம் இதுவா?

இந்நிலையில் பாக்கியாவும் கோபியும் ஒரு வாரமாக ஒரே ரூமில் தூங்குகிறார்கள். அதனால் கோபி ராதிகாவிடம் போன் பேச முடியாமல் இருக்கிறார். ராதிகா தினமும் இரவு போன் செய்ய ஆனால் கோபியால் எடுக்க முடியவில்லை. அதனால் பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது, இன்றைய எபிசோடில் அதே போல கோபிக்கு இன்றும் போன் வருகிறது. ஆனால் பாக்கியா தூங்குவது போல நடிக்க கோபி வெளியே சென்று போன் பேசுகிறார். அதனால் பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.

Exams Daily Mobile App Download

கோபி பாக்கியாவிற்கு தெரியாது என நினைத்து கோபி வந்து படுக்க வருகிறார். அதை பார்த்து கோபி வருத்தப்படுகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் கோபிக்கு மீண்டும் போன் வர உடனே கோவப்பட்ட பாக்கியா எழுந்து இந்த நேரத்தில் யார் போன் செய்கிறார் என கேட்கிறார். அதற்கு கோபி ஒன்றும் சொல்லாமல் இருக்க பாக்கியா போனை வாங்கி பேச போகிறார். அதில் ராதிகா நம்பர் வர அதை பார்த்து பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!