கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா, அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா, அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன கோபி - சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா, அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன கோபி - சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா, அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

நீங்கள் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் என்றால் இந்த பதிவை மிஸ் பண்ணீராதிங்க. ஏன்னா! இந்த வார எபிசோடுகளில் என்ன நடடகப்போகுது என்பது வெளியாகி வேற லெவல் ட்விஸ்டு கொண்டு பக்கா திருப்பதுடன் காத்திருக்கிறது. முழுமையாக இப்பதிவை படித்து கோபி,பாக்கியாவிடம் எப்படி சிக்கினார் என்பதையும், அடுத்து பாக்கியாவின் முடிவு என்ன என்பதையும் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுடனும், கோபிக்கு புது புது ஆப்புகளுடனும் வேற லெவல் ட்விஸ்ட் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு ஷாக் கொடுத்தா பரவாயில்ல, மனுஷன் பாவம் கோபிக்கு ஒவ்வொரு நாள் விடியலும் புத்தம் புது ஷாக்குகளுடன் தொடங்குகிறது. இவ்ளோ நாள் மனைவி பாக்கியாவை முட்டாளாக்கி தந்திரமாக பல கில்லாடி வேலைகளை செய்து முன்னாள் காதலி ராதிகாவுடன் லூட்டி அடித்த கோபி தற்போது கையும் களவுமாக ராதிகாவிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகி கவலையில் தவித்து வருகிறார்.

22வது பிறந்தநாளை கொண்டாடிய “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

இதை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷமும், மறு பக்கம் அப்பாவி பாக்கியா எப்போதான் புத்தி தெளிவாக போறீங்க? என்றெல்லாம் கோவத்தையும் காட்டி வந்த நிலையில் படு ட்விஸ்ட்டோடு இந்த வார ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா கோபி காரில் இருந்த பையை எதார்த்தமாக பார்க்கிறாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் அதை பார்த்து ஷாக் ஆகிறார். அதில் என்ன இருந்தது என்பது எபிசோடுகள் வந்தாதான் தெரியும். அதன் பிறகு கோபி அறைக்குள் நுழைந்த பாக்கியா ஒரு பேப்பரை கோபிக்கு முன் நீட்ட, உடனே கோபி என்கிட்டே எதுக்கு கொடுக்குற இத? என அதிகாரத்துடன் கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

அதற்கு பாக்கியா உங்க பாக்கெட்டில் இருந்து தான் நான் எடுத்தேன்ங்க! அப்றம் இந்த ப்ளவுஸ் தச்ச பில் உங்க கார்ல இருந்து எடுத்தேன் என்று சொல்ல கோபி ஷாக் ஆகிறார். பாக்கியாவும் என்னதாங்க நடக்குது என்னோட வாழ்க்கையில, ஒரு வேல உங்கள நான் முட்டாள் தனமா நம்பிட்டு இருக்கேனா? என ஒரே போடு போட்டதை கண்டு கோபி உறைகிறார். உடனே சமாளிக்க நினைத்து கோபி என்ன உளறிட்டு இருக்க என கேட்க, பாக்கியா ஆமாங்க! வர வர உங்க நடவடிக்கை எதுவுமே சரியில்லை, தினமும் குடிக்குறீங்க, யார்கிட்டயோ தினமும் நைட் போன்ல டியர், டார்லிங்ன்னு கொஞ்சி பேசுறீங்க! எனக்கு இதுக்கெல்லாம் உண்மை இப்போவே தெரிஞ்சாகனும் என சொல்ல அத்துடன் ப்ரோமோ முடிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எப்போடா? இந்த எபிஸோடா போடுவீங்க என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here