பாக்கியவிடம் கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

0
பாக்கியவிடம் கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
பாக்கியவிடம் கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
பாக்கியவிடம் கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து பார்வையாளர்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்பட்டு வரும் கதைக்களத்தை கொண்ட பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியை பற்றி தெரிந்து கொண்ட ராதிகா பாக்கியாவிடம் அழுது சொன்ன விஷயத்தை குறித்து பார்ப்போம்.

பாக்கியலட்சுமி:

கோபியின் பல நாள் லீலைகளை தெரிந்து கொண்ட ராதிகா தனது உண்மையான காதலை இப்படி பயன்படுத்தி கொண்டு இவ்ளோ நாள் ஏமாற்றிவிட்டாரே என்ற ஆதங்கத்தில் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை குறித்து முந்தய எபிசோடுகளில் பார்த்தோம். அதை தொடர்ந்து இன்று பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் இரண்டாவது முறையா ஒருத்தரை நம்பி ஏமாந்துட்டேன் டீச்சர் என பாக்கியாவிடம் சொல்லி அழுகிறாள். இதை கேட்ட பாக்கியா என்ன சொல்றீங்க? என்னாச்சு அப்படி? அவரு ரொம்ப நல்லவரு, மயூவ நல்லா பாத்துக்குறாரு சொன்னீங்களே என்று கேட்க, இடையிலே மறுத்தவளாக இல்லை டீச்சர் எல்லாமே பொய் அவரோட மனைவி எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க. இப்படி இருக்கப்போ நான் எப்படி அவரை கல்யாணம் பண்றது என சொல்கிறாள்.

பாரதி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட லட்சுமி & ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வருபவை!

அதற்க்கு பதில் சொல்ல முடியாமல் குழப்பத்தில் பாக்கியா இருக்க, உடனே ராதிகா உங்க கணவர் எப்படி இருக்காரு? ஏதும் சண்டை போடுறாரா? என கேட்டாள். பாக்கியாவும் அவருடைய நடவடிக்கையும் கொஞ்ச நாட்களா சரியில்ல, அவருக்கும் யாருடனோ தொடர்பு இருக்குனு மட்டும் புரியுது. அதுமட்டுமில்லாம அவர் வீட்ல யாரிடமும் சரியா பேசுறதில்லை. ஏன்னு கேட்டா வீட்டுக்கு வரவே பிடிக்கலனு சொல்றாரு. என்னை அவருக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது ஆனால் வீட்டுல உள்ள எல்லாரையும் புடிக்கும். அப்படி இருக்கப்போ அவங்கட்ட கூட கோவத்தை காட்டுறாரு. அவருக்கு என்ன பிரச்சனைனு தெரியல, இந்த ஒரு வாரத்துல நெறைய கோபப்படுறாரு என சொல்கிறாள்.

இதெல்லாம் கேட்ட ராதிகா மனதுக்குள் இப்படி கணவர் மேல அக்கறையா இருக்க டீச்சர் எப்படி விவாகரத்துக்கு சம்மதிச்சாங்க என யோசிக்கிறாள். பிறகு பாக்கியாவிடம் ராதிகா எதுவும் தப்பா நடக்காது என ஆறுதல் சொல்லிவிட்டு மனதிற்குள்ளே நான் எப்பவும் உங்க வாழ்க்கைல குறுக்க வர மாட்டேன் என புழுங்கி கொண்டாள். அதன் பிறகு வீட்டுக்கு வந்த பாக்கியா வீட்டில் உள்ள எல்லாரிடமும் ராதிகா சொன்னதை குறித்து பேசி வருத்தப்படுகிறாள். இதனை கேட்ட எழில் ஒன்னும் புரியாதவனாக என்னத்தான் நடக்கும்னு பாப்போம் என நினைத்து கொண்டார். இதனிடையில் கோபி ராதிகா வீட்டிற்கு வந்து மயூவிடம் பேசி கொண்டிருக்கிறான்.

Exams Daily Mobile App Download

அப்போது அங்கு வரும் ராதிகா, கோபி மீது உள்ள வெறுப்பால் மயூவை அதட்டி உள்ளே போக சொல்கிறாள். உடனே அவளிடம் கோபி நான் உனக்காக, நம்ம எதிர்காலத்துக்காக தான் எல்லாமே பண்ணேன் அத புரிஞ்சிக்காம என்ன வெறுக்குற என கேட்டார். அதற்கு ராதிகா நான் எப்படி டீச்சர்க்கு துரோகம் பண்ணுவேன்னு நீங்க நினைச்சீங்க என்கிறாள். உடனே கோபி அவ உனக்கு நல்ல பிரெண்ட்டா இருக்கலாம். ஆனா எனக்கு நல்ல மனைவி இல்லை என சொன்னதை கேட்ட ராதிகா கோபத்தில் பார்க்கிறாரா? இல்லை மனசு மாறுவாரா? என்ற குழப்பத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!