காதலை ஒப்புக்கொண்ட அமிர்தா, வாயடைத்துப்போன எழில் – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

0
காதலை ஒப்புக்கொண்ட அமிர்தா, வாயடைத்துப்போன எழில் - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
காதலை ஒப்புக்கொண்ட அமிர்தா, வாயடைத்துப்போன எழில் - புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
காதலை ஒப்புக்கொண்ட அமிர்தா, வாயடைத்துப்போன எழில் – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் அமிர்தாவை தீவிரமாக எழில் காதலித்து கொண்டிருக்கிறார். அமிர்தாவும் கூடிய விரைவில் அவருடைய காதலை எழிலிடம் கூறும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபி குறித்தான அனைத்து உண்மைகளும் எப்போது தான் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவிடம் ஒரு இடத்தில்கூட மாட்டிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக எல்லா நேரங்களிலும் கோபி தப்பித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற விஷயம் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரிந்துவிடுகிறது.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா MI? ஒரு அலசல்!

எப்படியாவது இந்த உண்மையை ராதிகாவிடம் சொல்லி பாக்கியாவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என நினைத்து வீட்டில் பாக்கியாவும் கோபியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ஆனால், ராமமூர்த்தி ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் நேரம் பார்த்து ராதிகா வீட்டை காலி செய்து வேறு ஒரு வீட்டிற்கு சென்று விடுகிறார். எப்படியாவது ராதிகாவின் வீட்டை கண்டுபிடித்து கோபி குறித்தான அனைத்து உண்மைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என தாத்தா முயற்சி செய்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் எழில் விதவையாக இருக்கும் அமிர்தாவின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். அமிர்தா விதவை என்பது தெரியாமலேயே அமிர்தாவின் மீது எழிலுக்கு காதல் வந்துவிடுகிறது. அதன் பின்னர் அமிர்தா விதவை என்று தெரிந்த பின்பும் கூட அமிர்தாவை தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென மனதளவில் தயாராகிறார். ஆரம்பத்தில் எழிலின் நடவடிக்கைகள் அமிர்தாவுக்கு எரிச்சலை கொடுத்தாலும் தற்போது எழிலின் மீது ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. அமிர்தாவை அறியாமல் அமிர்தா எழிலை காதலிக்க ஆரம்பித்து விட்டார். கூடிய விரைவில் எழிலிடம் தன்னுடைய காதலை அமிர்தா தெரியப்படுத்த போகும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here