கோபி, ராதிகா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

0
கோபி, ராதிகா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பாக்கியா - சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
கோபி, ராதிகா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பாக்கியா - சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
கோபி, ராதிகா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

பாக்கியா காவல் நிலையத்தில் இருந்த போது கோபி உதவிக்கு வரவில்லை என குடும்பமே கோபி மீது கோவத்தில் உள்ளனர். இந்நிலையில், பாக்கியா, கோபி மற்றும் ராதிகாவை பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கூட மிகவும் கஷ்டப்பட்டு ராதிகா காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அதாவது மயூவின் பிறந்தநாளுக்காக 100 பேருக்கு சமைக்க சொல்லி பாக்கியாவிடம் ராதிகா ஆர்டர் கொடுத்திருந்தார். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நட்சத்திரங்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கின்றனர். பாக்கியாவை கைது செய்ததுமே குடும்பத்தில் உள்ள அனைவரும் பயந்துவிட்டனர். பாக்கியாவை விரைவில் எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே மாற்றி மாற்றி கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி எவரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை. இதனால் குடும்பமே கோபி மீது கொலை வெறியில் இருக்கின்றனர்.

பாக்கியா இப்படி சிக்கலில் மாட்டி தவித்து கொண்டிருக்கும் போது கூட கோபி உதவிக்கு வரவில்லை என கோபியின் அம்மாவும் அப்பாவும் கவலைப்படுகின்றனர். இதற்கு பிறகு எதுவுமே நடக்காதது போல வீட்டிற்கு வந்து பாக்கியாவை கைது செய்த விஷயமே எனக்கு தெரியாது. நான் முக்கியமான வேலையில் இருந்தேன் என கூறுகிறார். பின்பு, தாத்தா நீ இவ்வளவு நேரம் ராதிகா வீட்டில் தானே இருந்தாய் என கூறிவிடுகிறார். அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரியவந்து அதிர்ச்சியில் பாக்கியா திகைத்து நிற்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!