கோபி & ராதிகாவை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து அதிர்ச்சியான பாக்கியா!

0
கோபி & ராதிகாவை கைது செய்த போலீசார் - உண்மையை அறிந்து அதிர்ச்சியான பாக்கியா!
கோபி & ராதிகாவை கைது செய்த போலீசார் - உண்மையை அறிந்து அதிர்ச்சியான பாக்கியா!
கோபி & ராதிகாவை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து அதிர்ச்சியான பாக்கியா!

பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு பல குழந்தைகளும் மயக்கமானதால் தற்போது பாக்கியாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கோபி மற்றும் ராதிகாவையும் போலீஸ் கைது செய்துள்ளதால் உண்மைகள் அனைத்தும் பாக்கியாவிற்கு தெரியவருமா என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவின் கண்ணுக்கு முன்னால் கோபி தவறு செய்தும் கூட பாக்கியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது பாக்கியாவும் கோபியும் ஒரே அறையில் தான் தூங்கி கொண்டிருக்கின்றனர். பாக்கியாவை பக்கத்தில் வைத்து கொண்டே ராதிகாவிடம் இரவு முழுக்க கோபி கடலை போட்டு கொண்டிருக்கிறார். எப்படியாவது பாக்கியாவை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து விரட்டிவிட வேண்டும் என கோபி நினைத்து கொண்டிருக்கிறார்.

குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்யும் முல்லை – கோவத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

தற்போது கூட மயூவின் பிறந்தநாளுக்கு 100 பேருக்கு சமைத்து தர வேண்டும் என சொல்லி பாக்கியாவிடம் ராதிகா ஆர்டர் கொடுக்கிறார். ராதிகா ஒவ்வொரு முறையும் பாக்கியாவை சந்தித்து பேசுவது கோபிக்கு நெருப்பில் நிற்பது போல இருக்கிறது. அதாவது மாட்டிகொள்வோமோ என பயப்படுகிறார். இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என நினைத்து பாக்கியா சமைத்து வைத்த உணவில் ஏதோ கலந்துவிடுகிறார். ஆனால் சாமர்த்தியமாக மயூ மற்றும் ராதிகாவை அந்த உணவை சாப்பிட விடாமல் ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார்.

பின்பு பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயங்கி விழுவதாக போலீசுக்கு புகார் போகியுள்ளது. இதனை தொடர்ந்து பாக்கியாவை போலீசார் கைது செய்கின்றனர். இதுமட்டுமல்லாமல் ராதிகா மற்றும் கோபியையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள். காவல் நிலையத்தில் தான் பாக்கியாவும் இருக்கிறார். தற்போது கோபியையும் கைது செய்த நிலையில் உண்மைகள் அனைத்தையும் பாக்கியா அறிந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here