அமிர்தா மீது காதலை வெளிப்படுத்திய எழில், பாக்கியாவை மட்டம் தட்டும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தா மீது காதலை வெளிப்படுத்திய எழில், பாக்கியாவை மட்டம் தட்டும் கோபி - இன்றைய
அமிர்தா மீது காதலை வெளிப்படுத்திய எழில், பாக்கியாவை மட்டம் தட்டும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தா மீது காதலை வெளிப்படுத்திய எழில், பாக்கியாவை மட்டம் தட்டும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மறுநாள் 100 உணவுகளை சமைப்பது பற்றி பதட்டமாக இருக்க கோபி பாக்கியா மீது வெறுப்பை காட்டுகிறார். பின் எழில் அமிர்தா கோவிலுக்கு செல்ல அங்கே எழில் அமிர்தா மீது உள்ள காதலை அழகாக காட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா உலக சாதனை செய்ய போகிறேன் என சொல்ல கோபி உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டாக இருக்கிறதா என கேட்கிறார். இந்த வீட்டில் எல்லா முடிவும் நீ தான் எடுப்பாய் என்றால் நான் எதற்கு இருக்கிறேன் என கோபி கோவமாக சொல்கிறார். உடனே எழில் அப்பா இப்படி தான் பேசுவார் என தெரியாதா என கேட்க அப்பா சொல்வது சரி தான என செழியன் சொல்கிறார். பின் எழில் அவர் இருக்கிறார் உன்னால் கண்டிப்பாக முடியும் என எழில் சொல்ல தாத்தாவும் பாக்கியாவை கண்டிப்பாக செய்ய முடியும் என சொல்கிறார்.

குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியில் முல்லை, கடை பிரச்சனைக்கு மீனா கொடுத்த யோசனை – இன்றைய எபிசோடு!

பின் பாக்கியா ரூமிற்கு வர கோபியிடம் தூக்கம் வருகிறதா என கேட்கிறார். கோபி ஆமாம் என சொல்ல நான் நாளைக்கு கண்டிப்பாக செய்துவிடுவேனா எனக்கு பதட்டமாக இருப்பதாக பாக்கியா சொல்கிறார். பேசாமல் தூங்கு என கோபி பாக்கியா எப்படி செய்யலாம் என தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி நிம்மதியாக தூங்க கூட விடமாட்டியா என கேட்கிறார். பின் அமிர்தாவும் எழிலும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது எழில் நீங்க கூப்பிட்டதால் தான் வந்தேன் என சொல்கிறார். அப்போது எழில் அமிர்தா பேசிக் கொண்டிருக்க ஜானு வருகிறார்.

அவர் அமிர்தாவிடம் எனக்கு எழிலை மிகவும் பிடிக்கும் எழில் இருக்கும் இடத்தில் எல்லாம் சந்தோசம் அதிகமாக இருக்கும். ஆனால் அவர் என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை, இப்போதும் காதலிப்பதாக சொன்னேன் ஆனால் எழில் உங்க மீது உள்ள காதலை சொன்னார் என சொல்ல அமிர்தா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என ஜானு சொல்கிறார். பின் ஜானு கிளம்ப எழில் வருகிறார். ஜானு என்ன சொன்னார் என கேட்க ஒன்றுமில்லை என அமிர்தா சொல்கிறார். பின் எழில் அமிர்தா சாமி கும்பிட போகலாம் என சொல்ல எழில் சரி என சொல்கிறார்.

அப்போது ஐயர் சாமி பூ கொடுக்க எழில் அதை அமிர்தாவிற்கு வைத்துவிடுகிறார். எழிலின் அன்பை பார்த்து அமிர்தாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. நான் பூ வைத்ததை நினைத்து கோவப்படீங்களா என கேட்க அதெல்லாம் இல்லை என அமிர்தா சொல்கிறார். பின் அமிர்தா அழ என்ன ஆச்சு என எழில் கேட்கிறார். கணேஷ் போன பின்னால் நான் பூ வைப்பது இல்லை என சொல்ல எழில் அதற்கும் இதுக்கும் எதுவும் சம்மந்தம் இல்லை என சொல்கிறார். நீங்க உங்க இஷ்டப்படி இருங்க என சொல்லி அமிர்தா கையை பிடித்துக் கொண்டு எழில் செல்கிறார்.

Exams Daily Mobile App Download

அமிர்தாவிற்கு என்ன பேசுவது என தெரியாமல் இருக்க எழில் அமிர்தாவும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது எழில் கையை அமிர்தா புடிக்கிறார். எழிலிற்கு அதை நினைத்து அதிர்ச்சியாக இருக்கிறது. எப்போதும் என் கூட இருப்பீங்களா என அமிர்தா கேட்க நான் எப்போதும் இப்படி தான் இருப்பேன் இதே அன்புடன் தான் இருப்பேன் நீங்க எல்லா பயத்தையும் விட்டுவிட்டு வாங்க என சொல்கிறார். அமிர்தா பூவை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என அமிர்தா கேட்ட நம்ம அப்பா அம்மா தவறாக நினைக்கமாட்டார்கள் என சொல்கிறார் எழில்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!