விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை விட்டு விலகிய எழில்? வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலை விட்டு விலகிய எழில்? வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை விட்டு விலகிய எழில்? வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் வெற்றிகரமான சென்று கொண்டிருக்கும் “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷால் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதனால் அவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

நடிகர் விஜே விஷால்:

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் விஜய் டிவியின் “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல். இந்த சீரியலில் வெற்றி அபியின் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. வெற்றி அபி பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் கெமிஸ்ட்ரியை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றி அபி மீது இருக்கும் காதலை புரிந்து கொள்வாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

கோபி ஏமாற்றுவதை கண்டுபிடித்த பாக்கியா, அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

அந்த வகையில் தற்போது கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜே விஷால் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இரண்டாவது மகனாக கதைக்கு முக்கிய கதாபாத்திரமான எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோபியை பற்றிய உண்மை எல்லாம் தெரிந்தவர்களில் எழில் தான் முக்கியமானவர்.

Exams Daily Mobile App Download

ஆனால் அவர் இப்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் என்ட்ரி கொடுப்பதால் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மேலும் எழில் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகி விட்டாரா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் குழுவுடன் விஜே விஷால் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here