விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் வில்லன் கோபி யார் தெரியுமா? இதுவரை அறியாத புது தகவல்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் வில்லன் கோபி யார் தெரியுமா? இதுவரை அறியாத புது தகவல்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் வில்லன் கோபி யார் தெரியுமா? இதுவரை அறியாத புது தகவல்கள்!

விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் கதை என்ற தலைப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் வில்லத்தனம் செய்து பெயர் பெற்ற கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸ் பற்றிய அறியாத உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் சதீஸ்:

தமிழக மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி எப்போது சிக்குவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோபியின் வில்லத்தனத்தை பார்த்த ரசிகர்கள் இது வெறும் சீரியல் தான் என்பதை மறந்து அவருக்கு பல இடங்களில் எதிர்ப்பு குரலை எழுப்பி வருகின்றனர். மேலும் கோபியின் வில்லத்தனத்தை பாராட்டும் வகையில் சிறந்த வில்லன் விருது விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டது.

கர்ப்பத்தை உறுதி செய்த முல்லை, மகிழ்ச்சியில் குடும்பம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி வருபவை!

கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஸ் 90’ஸ் காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போது இளசுகளை மிஞ்சும் அளவிற்கு அவர் செய்யும் காதல் காட்சிகளை எல்லாம் பலரை ரசிக்க வைத்துள்ளது. கொடூரமான வில்லனாக காட்டப்பட்டாலும் குடும்பத்திடம் மாட்டிக் கொள்வோமா என பயம் வந்தால் அவருடைய ரியாக்சன் பார்த்து ரசிக்காத ஆளே இல்லை. இந்நிலையில் நடிகர் சதீஸ் சூலம், கல்யாண பரிசு2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்கல விலாஸ், குலதெய்வம், பொன்னூஞ்சல் என பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

மேலும் 1990 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடித்து வரும் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் தான் தனி அங்கீகாரம் கொடுத்தது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் இவரை தவிர யாரும் கோபியாக நடிக்க முடியாது என்ற நிலை வந்துள்ளது. நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏகப்பட்ட விருதுகள் கொடுக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இனி சீரியலில் கோபி சிக்கும் காட்சிகள் வரும் போது TRPயில் பெரிய மாற்றம் வரும் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!