கண்ணம்மாவை வெறுக்க வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி – சீரியலில் புதிய திருப்பம்!

0
கண்ணம்மாவை வெறுக்க வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி - சீரியலில் புதிய திருப்பம்!
கண்ணம்மாவை வெறுக்க வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி - சீரியலில் புதிய திருப்பம்!
கண்ணம்மாவை வெறுக்க வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி – சீரியலில் புதிய திருப்பம்!

விஜய் டிவி சீரியலில் கண்ணம்மா சரியான நேரத்தில் இதயத்தை அனுப்பி குழந்தையின் உயிரை காப்பாற்றினார். கண்ணம்மாவின் நல்ல மனதை பார்த்து கண்ணம்மாவை ஏற்றுகொள்வோமோ என பயந்து பாரதி வெண்பாவை திருமணம் செய்யும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணம்மாவை விட்டு பாரதி பிரிந்து இருக்கிறார். வெண்பா தான் கண்ணம்மா மீது பழியை சுமத்தி கண்ணம்மாவை வில்லியாக சித்தரித்து வைத்திருக்கிறார். வெண்பா பேச்சை தற்போது வரைக்கும் பாரதி கேட்டு கண்ணம்மாவை சந்தேகப்பட்டு கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் மோகத்தால் டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆரம்பத்தில் கண்ணம்மாவை அனைவருமே வெறுத்து ஒதுக்கிய காலகட்டத்தில் பாரதி தான் கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே பாரதியை வெண்பா காதலித்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டதை வெண்பாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படியாவது பாரதியையும், கண்ணம்மாவையும் பிரித்து பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிளான் போட்டு கொண்டிருக்கிறார். வெண்பா தான் கண்ணம்மா வயிற்றில் இருப்பது உன் குழந்தை கிடையாது என கூறி சந்தேகத்தை ஏற்படுத்தினார்.

Exams Daily Mobile App Download

கண்ணம்மாவை வெறுப்பதற்காக ஏற்கனவே பாரதி வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். பின்பு கடைசி நேரத்தில் வந்து கண்ணம்மா திருமணத்தை நிறுத்தி விட்டார். தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் தான் வேலை பார்த்து வருகின்றனர். கண்ணம்மாவை விட்டு எப்படியாவது விலகியே ஆக வேண்டும் என நினைக்கிறார். தற்போது கூட ஒரு குழந்தையின் உயிரை கண்ணம்மா காப்பாற்றியதால் கண்ணம்மாவை பாரதி புகழ்ந்து பேசினார். கண்ணம்மாவை ஏற்றுகொள்வோமோ என பயந்து பாரதி வெண்பாவை மறுபடியும் திருமணம் செய்ய நினைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!