கோபிக்கு வந்த ராதிகா போன் அழைப்பை எடுத்து பேசிய பாக்கியா – இனி சிக்குவாரா? இன்றைய எபிசோட்!

0
கோபிக்கு வந்த ராதிகா போன் அழைப்பை எடுத்து பேசிய பாக்கியா - இனி சிக்குவாரா? இன்றைய எபிசோட்!
கோபிக்கு வந்த ராதிகா போன் அழைப்பை எடுத்து பேசிய பாக்கியா - இனி சிக்குவாரா? இன்றைய எபிசோட்!
கோபிக்கு வந்த ராதிகா போன் அழைப்பை எடுத்து பேசிய பாக்கியா – இனி சிக்குவாரா? இன்றைய எபிசோட்!

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிற பாக்கியலட்சுமி தொடரில் இன்று நடந்த நிகழ்வுகளை சுவாரசியம் குறையாமல் இப்பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

சின்னத்திரையில் புது புது சீரியல்கள் பல வந்தாலும் சில சீரியலுக்கு தான் மவுசு உண்டு. ஏனென்றால் ஒவ்வொரு சீரியலுக்கும் தனி அடையாளங்கள் உண்டு, தனி கதைக்களம் உண்டு. அந்த வகையில் இல்லத்தரசியை மையமாக வைத்து ஆரம்பமாகி இந்த ஆண்டு பல விருதுகளை தட்டி சென்றுள்ள நாடகம் தான் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் குடும்பமாக அமர்ந்து அனைவரும் ராமமூர்த்தி பிறந்தநாளை மிக சிறப்பாக பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்று சொல்லி பிளான் செய்து கொண்டிருந்தார்கள்.

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!

இதை குறித்து கோபி வந்ததும் அம்மா ஈஸ்வரி அவரிடம் சொல்ல, அதற்கு கோபி எதுக்கு அம்மா இதெல்லாம்? என்று கேட்டார். உடனே ஈஸ்வரி ஏன் நிறைய செலவாகும்னு நினைக்குறியா? அதெல்லாம் நான் பாத்துக்குறேன் என்றும் அவருடைய பென்சன் பணம் இருக்கு என சொல்கிறாள். உடனே கோபி, அந்த நோக்கத்தில் நான் சொல்லலாமா அவர் உடம்பு சரியில்லாமல் இருக்காரு அதான் இந்த சமயம் எதுக்குன்னு கேட்டேன் என்று சொல்கிறார். அதெல்லாம் அவங்களோட சொந்தக்காரங்கல பார்த்தா அவர் ரொம்ப சந்தோஷப்படுவாரு அதனால நீ வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத என ஈஸ்வரி சொல்லியதும், கோபி புன்னகையுடன் ஜாம் ஜாம்னு பண்ணிவிடலாம் என்கிறார்.

அதன்பின்னர் பாக்யாவிடம் சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டா போதும். உன்னோட பிரெண்ட், ராதிகாவை எல்லாம் கூப்பிட கூடாது என்று தன்னை காப்பாத்திக்கொள்ளும் திட்டத்தில் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறான். அதன் பின்னர் மாலை நேரத்தில் கோபி பணத்தை எடுத்து வந்து பாக்கியாவிடம் கொடுத்து என்னென்ன செலவு பண்ணனுமோ பண்ணிக்க. கிராண்டா இருக்கணும் என சொல்கிறான். அப்போது ஜெனி செழியனிடம் என்ன கிஃப்ட் கொடுக்கிறது என கேட்க அதெல்லாம் கொடுக்கனுமா என கேட்கிறான். இதனால் கோபப்பட்டு ஜெனி திட்டுகிறாள்.

பிறகு இரவு நேரத்தில் எப்போதும் போல ராதிகா கோபிக்கு போன் செய்கிறார். அவரும் அழைப்பை கண்டு படுக்கையை விட்டு எழுந்து பேச முயற்சிக்கையில் அதை கண்ட பாக்கியா இருங்க, எங்க போறீங்க? என கேட்டதும் கோபி அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறார். உடனே கோபி, இல்லை என் நண்பன் ஒருவன் எப்போவும் இரவு நேரம் இப்படி போன் செய்து அவன் கஷ்டத்தை சொல்லி புலம்புவான் அவன் தான் இப்போவும் போன் பன்றான் என சொல்லி சமாளிக்கிறார். ஒரு பக்கம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ராதிகா போன் செய்ய, இந்த பக்கம் கோபியும் கட் செய்து வர, அனைத்தையும் பாக்கியா நோட் செய்துவிட்டு போன குடுங்க நான் பேசுறேன் என்று சொல்லி கோபியை ஒரு கணம் உறையவைத்துவிட்டார்.

Exams Daily Mobile App Download

கோபியும் விடு நான் போன் சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன் இப்போ நீ நிம்மதியா தூங்கு என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார். அதன் பின்னர் மறுநாள் காலையில் பாக்கியாவிடம் எழிலும் ஈஸ்வரியும் வந்து இன்னைக்கு ஸ்வீட் செய்து விடலாமா என கேட்க அவளும் சரியென சொல்கிறாள். பிறகு எழிலிடம் அமிர்தாவை வீட்டுக்கு கூட்டிட்டு வா. அவ செஞ்ச ஸ்வீட்டை மாமா ரொம்ப ரசிச்சி சாப்பிட்டார் என பாக்கியா சொல்ல எழில் கையோடு கூட்டிட்டு வரேன் என கிளம்புகிறான். அவன் போனதும் அந்த பொண்ணை ஏன் கூட்டிட்டு வர சொல்ற. எனக்கு சுத்தமா பிடிக்கல என கூறுகிறார் ஈஸ்வரி . இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!