பாரதிக்கு தெரியாமல் DNA டெஸ்ட் எடுத்த கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கதையில் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்வதால் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில் கண்ணம்மா பாரதிக்கு தெரியாமல் DNA டெஸ்ட் எடுக்க இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது .
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா என கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், பல திருப்பங்கள் வருகிறது. வில்லி வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என அவருடைய அம்மா பிடிவாதமாக இருக்க வெண்பா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். மறுபக்கம் அப்பாவை தேடி அலைந்த லக்ஷ்மிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரியவருகிறது. ஆனாலும் லட்சுமி வெளியே சொல்லாமல் இருக்க அதை கண்டுபிடித்த கண்ணம்மா லக்ஷ்மியை நினைத்து பெருமைப்படுகிறார்.
கோபி குடும்பத்தை பார்க்க வீட்டிற்கே சென்ற ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மறுபக்கம் மருத்துவமனையில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்து சக்தி உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். அதனால் பல இடங்களில் இருந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் வருகிறது. இந்நிலையில் பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என்ற கேள்விக்கும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான் என்ற உண்மை பாரதிக்கு கடைசி வரை தெரியாமல் இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அதனால் கதையில் மாற்றம் வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இனி வரும் எபிசோடில் கண்ணம்மா மருத்துவமனையில் இருப்பவரின் உதவி உடன் பாரதிக்கு DNA டெஸ்ட் எடுக்கலாம் என முடிவு செய்கிறார். அவர் டெஸ்ட் எடுப்பது பாரதிக்கு தெரியாமல் இருக்கிறது. கண்ணம்மா அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து பாரதியை வெறுப்பேற்ற அதில் என்ன வந்துள்ளது என பாரதி பார்க்க ஆர்வமாக இருக்கிறார். இந்த ரிசல்ட்டை கோர்ட்டில் காட்டி கண்ணம்மா விவாகரத்து வாங்காமல் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.