துர்காவை திருமணம் செய்து கொள்ளும் வெண்பா – மகிழ்ச்சியில் ஷர்மிளா! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
துர்காவை திருமணம் செய்து கொள்ளும் வெண்பா - மகிழ்ச்சியில் ஷர்மிளா! சீரியலில் அடுத்த திருப்பம்!
துர்காவை திருமணம் செய்து கொள்ளும் வெண்பா - மகிழ்ச்சியில் ஷர்மிளா! சீரியலில் அடுத்த திருப்பம்!
துர்காவை திருமணம் செய்து கொள்ளும் வெண்பா – மகிழ்ச்சியில் ஷர்மிளா! சீரியலில் அடுத்த திருப்பம்!

வெண்பாவிற்கு எப்படியாவது வேறொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என சர்மிளா வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வெண்பாவிற்கு ஷர்மிளா துர்காவை திருமணம் செய்து வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா, லட்சுமி ஹேமா என நான்கு பேரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வார்களா என ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் வருவதற்கு முழுக்க முழுக்க வெண்பா தான் காரணம். கண்ணம்மா மீது சந்தேகத்தை ஏற்படுத்தி பாரதியை திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா மானசா – கடுப்பான சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!

ஆனால் பாரதிக்கு வெண்பாவை திருமணம் செய்வதாக ஐடியாவே இல்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாரதியை திருமணம் செய்துகொள்ள வெண்பா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் வெண்பாவிற்கு பாரதியை திருமணம் மட்டும் செய்ய முடியவில்லை. தற்போது கூட வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருக்கிறார். வெண்பாவிற்கு பாரதியை திருமணம் செய்து வைக்க ஷர்மிளா உதவி செய்வார் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கலாம் என ஷர்மிளா திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

மேலும், வெண்பாவிடம் ஷர்மிளா நீ இப்போதே பாரதியை மறந்துவிட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என அவ்வபோது மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஷர்மிளா ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்து விட்டால் அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டார் என்பது வெண்பாவிற்கு நன்றாகவே தெரியும். இதனால் பாரதியை பிரித்து விடுவாரோ என வெண்பா பயப்படுகிறார். பின்பு, வெண்பா கடத்தி வைத்திருந்த துர்கா ஷர்மிளாவிடம் சென்று நான் உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறுகிறார். உடனே வெண்பாவிற்கு ஷர்மிளா துர்காவை திருமணம் செய்து வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!