வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அடுத்த திருப்பம்!

0
வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி - 'பாரதி கண்ணம்மா' தொடரில் அடுத்த திருப்பம்!
வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி - 'பாரதி கண்ணம்மா' தொடரில் அடுத்த திருப்பம்!
வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அடுத்த திருப்பம்!

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் வெண்பா மற்றும் பாரதியின் திருமணம் நடைபெற போவதாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் வர முழுக்க முழுக்க வெண்பா தான் காரணம். கண்ணம்மாவையும் வருணையும் தவறாக பேசி அதை நம்ப வைத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகள் ஆகியும் பாரதிக்கு கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் துளி கூட குறையவில்லை. எப்போது தான் பாரதி DNA டெஸ்ட் எடுத்து கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்துகொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

அரங்கேறும் பார்வதி, பாஸ்கரின் திருமண வைபோகம் – கடுப்பில் அர்ச்சனா, விக்கி! ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். கண்ணம்மாவை பாரதி புரிந்துகொள்வாரோ என்கிற பயம் வெண்பாவிற்கு இருக்கிறது. இதனால் எப்படியாவது விரைவில் பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருக்கிறார். பாரதியை திருமணம் செய்துவிட்டு ஒரு வருடத்திற்குள் வந்துவிடுவேன் என கூறிவிட்டு தானே வந்தாய். ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும் நீ பாரதியை திருமணம் செய்துகொள்ளப்போவதாக இல்லை.

Exams Daily Mobile App Download

இதனால் இப்போதே நான் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என வெண்பாவை ஷர்மிளா மிரட்டுகிறார். இதனால் உடனடியாக வெண்பாவிற்கு மாப்பிளை பார்க்கும் வேளையில் ஷர்மிளா இறங்கியிருக்கிறார். எப்படியும் ஷர்மிளா கூறிவிட்டால் அதை செய்யாமல் விடவே மாட்டார் என பயப்படும் வெண்பா கூடிய சீக்கிரத்தில் பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். இதனை தொடர்ந்து இந்த வாரம் பாரதி மற்றும் வெண்பாவின் திருமணம் நடைபெற போவதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!