மகளை மாறி மாறி வெறுப்பேற்றிய “பாக்கியலட்சுமி” சீரியல் ராதிகா – வைரலாகும் வீடியோ!

0
மகளை மாறி மாறி வெறுப்பேற்றிய
மகளை மாறி மாறி வெறுப்பேற்றிய "பாக்கியலட்சுமி" சீரியல் ராதிகா - வைரலாகும் வீடியோ!
மகளை மாறி மாறி வெறுப்பேற்றிய “பாக்கியலட்சுமி” சீரியல் ராதிகா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் காதலியாக வலம் வரும் ராதிகா தனது மகள் மயூராவை வெறுப்பபேற்றி நகைச்சுவையாக செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பாக்கியலட்சுமி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதனால் பல ஏமாற்று வேலைகளை அவர் செய்கிறார். பாக்கியாவிற்கு இந்த உண்மை எல்லாம் தெரியாமல் இருந்தாலும் கோபியின் தந்தை ராமமூர்த்திக்கும், இரண்டாவது மகன் எழிலிற்கும் உண்மை எல்லாம் தெரியும். ஆனால் உண்மையை சொன்னால் பாக்கியா தாங்கி கொள்ளமாட்டார் என்பதால் அவர் சொல்லாமல் இருக்கிறார்.

கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!

இந்நிலையில் கோபியின் ஆட்டத்திற்கு ஒரு முடிவு வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அப்படி நடந்தால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் சிறிது சிறிதாக கதை நகர்த்தி கொண்டு வரப்படும். முதலில் கோபி ராதிகாவிடம் சிக்குவார் எனவும் அதனால் ராதிகா கோபியை வெறுத்தாலும் அவரை பிரிய முடியாமல் பாக்கியாவிற்கு எதிராக மாறப் போகிறார். இப்படி கதை செல்லப் போகிறது என ஒரு பக்கம் தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது வரை பாசிட்டிவாக இருக்கும் ராதிகா இனிமேல் பாக்கியாவிற்கு வில்லியாக மாற இருக்கிறார். அந்த எபிசோடுகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகா தனது மகள் மயூராவுடன் செய்த ரீல்ஸ் வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. வடிவேலு காமெடி டயலாக் சொல்லி அவரது மகளை அவர் வெறுப்பேற்றுவது போல அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. ஏகப்பட்ட பாக்யலக்ஷ்மி ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!