விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" வெண்பா பரீனா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் களமிறங்கியவர் நடிகை பரீனா. அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது மேக்கப் இல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை பரீனா:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. அந்த வகையில் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சீரியல் ஹீரோ ஹீரோயின்களை விட வில்லிகளுக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா. அவர் சீரியல் கதைக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். பாரதி கண்ணம்மாவை பிரிக்க அவர் செய்த வில்லத்தனம் அளவில்லாமல் இருக்கிறது.

அமிர்தாவிடம் அப்பா பற்றி பேசி வருத்தப்படும் எழில், நல்ல மதிப்பெண் பெற்ற இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்படி கதை சென்று கொண்டிருக்க சீரியலை தவிர்த்து பரீனாவிற்கு இன்ஸ்டா பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பகாலத்தில் அவர் நடத்திய போட்டோஷூட்கள் மற்றும் சுகப் பிரசவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்த உடற்பயிற்சிகள் என அனைத்துமே ட்ரெண்டாகின. அதனால் பலர் அவரை முன்னுதாரணமாக நினைக்க தொடங்கினார்கள். தற்போது அவர் குழந்தை, தொழில் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்

இந்நிலையில் பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும், ஏகப்பட்ட ரசிகர்கள் அதில் லைக்குகளை கொடுப்பார்கள். தற்போது துளி கூட மேக்கப் போடாமல் அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. அதில் குட்டியாக வெள்ளை நிற கவுனில் இருப்பதால் பலர் கலாய்த்தும் வருகின்றனர். மேக்கப் இல்லைனா அவ்வளவு தான் போல. பார்க்கவே பயமா இருக்கு. யாருப்பா இது. ஏன் இவ்வளவு டல்லா இருக்கார் என பலரும் கேட்டு வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!