பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் பாரதி - இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் பாரதி - இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருப்பதால் சேருவார்கள் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது தான் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. எப்போதும் பாரதி கண்ணம்மா தொடர் தான் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததன் காரணமாக புதிய கதாபாத்திரங்களை சீரியலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். அதாவது, சௌந்தர்யாவின் நண்பனாக விக்ரம் மற்றும் வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளாவை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.

தாத்தாவின் பிறந்தநாளுக்கு திட்டமிடும் குடும்பத்தினர், பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி – இன்றைய எபிசோட்!

வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படுவில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் வெண்பாவிற்கே வில்லியாக இருந்து வருகிறார். அதாவது வெண்பாவிற்கு பாரதியை திருமணம் செய்து வைக்க ஷர்மிளா உதவி செய்வார் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதியையும் கண்ணம்மாவைவும் சேர்த்து வைக்கலாம் என ஷர்மிளா திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், வெண்பாவிடம் ஷர்மிளா நீ இப்போதே பாரதியை மறந்துவிட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என அவ்வபோது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

வெண்பாவும் ஷர்மிளாவுக்கு மிகவும் பயப்படுகிறார். இதற்கு இடையே பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அருகிலே இருக்கும் போது கண்ணம்மாவை புரிந்துகொண்ட கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இப்படி இருக்கையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக திருமதி செல்வம் சீரியலின் மூலமாக பிரபலமான சஞ்சீவ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!