ஹேமாவிடம் லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு!

0
லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா - இன்றைய
லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா - இன்றைய
ஹேமாவிடம் லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு!

இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடில் கண்ணம்மா, ஹேமாவிடம் லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லி மகிழ்ச்சியடைகிறார். பிறகு சௌந்தர்யா கையில் இருக்கும் காயத்தை பார்க்கும் பாரதி அதற்கு கண்ணம்மா தான் காரணம் என கூறுகிறார்.

பாரதி கண்ணம்மா:

கண்ணம்மா அந்நியன் பட பாணியில் வெண்பாவை கலாய்த்த கோபத்தில் ஆப்பிளை தாறுமாறாக குத்திக் கொண்டிருக்கிறார் வெண்பா. அப்போது அங்கு வரும் சாந்தியிடம், கண்ணம்மா அந்நியன் படத்தில் வருவதை போலவே அழுகுறா, சிரிக்குறா, அடிக்குறா, வித்தியாசமா பண்றா என புலம்புகிறார். பிறகு சௌந்தர்யா கையில் ஏற்பட்ட காயத்தை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் கவலை கொள்கின்றனர். தொடர்ந்து, கண்ணம்மா கிட்ட ஹேமா தான் உன் குழந்தை என சொல்லிட்டு வந்துட்ட அடுத்து என்ன பிரச்சனை உருவாகும்னு நெனச்சா பயமா இருக்கு.

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கலாட்டாவுடன் தொடங்கும் திருமணம் – இந்த வார ப்ரோமோ!

இப்போ பாரதி வந்தா என்னெல்லாம் கேட்கப்போறானோ என சௌந்தர்யா சொல்லிக் கொண்டிருக்க பாரதியும் ஹேமாவும் உள்ளே நுழைகின்றனர். சமையலம்மா எங்க என்று ஹேமா கேட்க, அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க என சௌந்தர்யா கூறுகிறார். பிறகு ஹேமா சென்றதும், கண்ணம்மா எதுக்கு இங்க வந்தா என பாரதி கேட்க, அனைவரும் திருதிருவென முழிக்கின்றனர். ஆனால் கண்ணம்மா இங்க வந்ததுக்கு முக்கியமாக காரணம் ஒன்னு இருக்கு, எதுக்கு ஹேமாவை பார்த்து கொஞ்சுறா, சிரிக்குறா என பாரதி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

கண்ணம்மா, ஹேமா பற்றி ஒரு கனவு கண்டிருக்கிறாள் அது தான் ஹேமாவை பார்ப்பதற்காக இங்க வந்தாள் என சௌந்தர்யா சமாளிக்க உங்க கனவு கதை எல்லாம் நல்லா இல்ல, நீங்க எல்லாரும் ஒரு முக்கியமான உண்மையை என்கிட்ட இருந்து மறைக்குறீங்க என பாரதி கேட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறார். பிறகு தன்னுடன் விளையாட ஒருவரும் இல்லையென லட்சுமி வருத்தப்பட்டு கொண்டிருக்க உன் கூட விளையாட சீக்கிரமே ஒரு ஆள் வந்துடும் என கண்ணம்மா கூறுகிறார்.

அப்போது ஹேமா, கண்ணம்மாவுக்கு போன் செய்து பேச லட்சுமியை அக்கா என கூப்பிட சொல்கிறார் கண்ணம்மா. பிறகு வீட்டில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க சௌந்தர்யா கையில் இருக்கும் காயத்தை பார்த்து என்னவென பாரதி கேட்கிறார். பாட்டில் கையில் குத்தியதால் காயம் ஏற்பட்டது என வேணு சமாளிக்க, கண்ணம்மா வந்துட்டு போனதும் தான் இப்படி ஆகியிருக்கு என பாரதி கோவப்பட்டு அங்கிருந்து செல்கிறார். இத்துடன் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு முடிவடைகிறது.

                   Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here