பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு!

0
பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு!
பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு!
பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு!   

தமிழகத்தின் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் இல. கணேசன் அவர்களை மணிப்பூர் மாநிலத்தில் ஆளுநராக நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

மணிப்பூர் ஆளுநர்:

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இல.கணேசன் அவர்கள் தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். பாஜகவின் தேசிய குழு உறுப்பினராக உள்ளார். இவர் பாஜகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இவருக்கு தற்போது 76 வயது ஆகும். பாஜக வை சேர்ந்த தலைவர்கள் பல முக்கிய பொறுப்புகளில் சம்மேக காலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மெட்ராஸ் தினம் 2021 – இன்று முதல் கோலாகல கொண்டாட்டம்! வரலாற்று உண்மைகள்!

அந்த வகையில், இல.கணேசன் அவர்கள் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் அவர்கள் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பில் இருந்தார். குடியரசுத் தலைவரின் உத்தரவின் படி, இல.கணேசன் அவர்கள் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார். இவரைப் போல், பாஜகவின் எல்.முருகன் அவர்களும் தமிழக மாநில பாஜக தலைவராக வகித்த நிலையில், மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!