ஹிஜாப் பிரச்சனை எழுந்த நகராட்சியில் 10 வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக – திமுக வேட்பாளர் வெற்றி!

0
ஹிஜாப் பிரச்சனை எழுந்த நகராட்சியில் 10 வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக - திமுக வேட்பாளர் வெற்றி!
ஹிஜாப் பிரச்சனை எழுந்த நகராட்சியில் 10 வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக - திமுக வேட்பாளர் வெற்றி!
ஹிஜாப் பிரச்சனை எழுந்த நகராட்சியில் 10 வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக – திமுக வேட்பாளர் வெற்றி!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனை உருவான 8வது வார்டில் பாஜக கட்சிக்கு வெறும் 10 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து வாக்கு மையங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் வெற்றி நிலவரங்கள் காலை 10 மணிமுதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!

அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியின் 8-வது வார்டில் பாஜக கட்சிக்கு வெறும் 10 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மாவட்டம் மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு பிப்.19ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது 8வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண்கள் பலர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்திருந்தனர். அப்போது, ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வாக்குச்சாவடிக்குள் நுழைய, ஹிஜாப்பை கழற்றிவிட்டு வருமாறு பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் அந்த பெண்ணை வாக்களிக்க விடாமல் தகராறு செய்தார்.

TCS நிறுவனத்தில் படித்துக் கொண்டிருப்போருக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

இதனை அடுத்து மற்ற திமுக, அதிமுக கட்சியின் முகவர்கள் பாஜக முகவர் கிரிராஜனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்கு சில நேரங்களாக பதற்றம் நீடித்தது. தொடர்ந்து பாஜக முகவர் வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்போது தேர்தல் முடிவடைந்தவுடன் பாஜக முகவர் கிரிராஜன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலூர் நகராட்சியில் ஹிஜாப் பிரச்சனை உருவாக்கிய சர்ச்சை காரணமாக 8வது வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here