Puducherry Election Result – பாஜக தொடர் முன்னிலை!
புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மதிய நேர தகவலின் படி பாரதிய ஜனதா கட்சி (BJP) அதிகபட்ச வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது
தேர்தல் முன்னிலை:
புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை துவங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த நாராயணசாமியின் ஆட்சி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து ஆளுநரின் ஆட்சி அமைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது.
TN Job “FB
Group” Join Now
புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அதன் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. அதன்படி இன்று காலை துவங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அடுத்த இடத்தில் உள்ளது. இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் மொத்த தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அறிவிக்கப்படும்.
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – முன்னிலை வகிக்கும் 15 அமைச்சர்கள்!!!
நண்பகல் வரை வந்துள்ள வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் மண்ணடிப்பேட்டை தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளர் நமசிவாயம் அதிகபட்ச வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து திருபுவானி தொகுதியில் AINRC வேட்பாளர் கோபிகா முன்னிலையில் உள்ளார். மங்களம் தொகுதியில் AINRC கட்சி முன்னிலையில் உள்ளது. மேலும் இந்திரா நகர், காமராஜ் நகர், நெல்லித்தோப்பு பகுதியிலும் பாஜக கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.