‘இன்னும் ஆறே மாதம் தான், ஊடகங்கள் அனைத்தும் நம்ம கன்ட்ரோல்’ – பாஜக தலைவர் அண்ணாமலை!

0
'இன்னும் ஆறே மாதம் தான், ஊடகங்கள் அனைத்தும் நம்ம கன்ட்ரோல்' - பாஜக தலைவர் அண்ணாமலை!
'இன்னும் ஆறே மாதம் தான், ஊடகங்கள் அனைத்தும் நம்ம கன்ட்ரோல்' - பாஜக தலைவர் அண்ணாமலை!
‘இன்னும் ஆறே மாதம் தான், ஊடகங்கள் அனைத்தும் நம்ம கன்ட்ரோல்’ – பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பாஜக கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை, இன்னும் 6 மாதங்களில் மொத்த ஊடகங்களையும் கட்டுக்குள் கொண்டு வருவதாக கூறியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

பாஜக தலைவர் பேச்சு:

தமிழகத்தில் இயங்கி வரும் பாஜக கட்சியின் மாநில தலைவராக பொறுப்பில் இருந்த எல்.முருகன் அவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பு கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பாஜகவின் அடுத்த மாநில தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் வரும் 6 மாதங்களில், மொத்த ஊடகங்களையும் பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை அவர் கொடுத்துள்ளார்.

‘நீட் தேர்வு உண்டு, உறுதிபட கூடிய கல்வித்துறை அமைச்சர்’ – மாணவர்களே தயாராகுங்கள்!

அதாவது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு, பாஜக கட்சியினரின் சார்பில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட அண்ணாமலை, ‘பாஜக பற்றி ஊடகங்களில் வரும் அவதூறான, உண்மையில்லாத செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம். இன்னும் 6 மாதங்களில் பாஜக கட்சியின் கீழ் அனைத்து ஊடகங்களும் வந்து விடும்’ என்று பேசியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அண்ணாமலை அவர்களின் கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதாவது மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ள நிலையில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என்று அவர் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர் ஏதோவொரு காரணத்தை வைத்து உள் தொனியில் பேசியிருப்பதாகவும் வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here