BIS பணியகத்தில் 300க்கும் மேற்பட்ட பணியிடம் – உடனே விரையுங்கள்..!

0

BIS பணியகத்தில் 300க்கும் மேற்பட்ட பணியிடம் – உடனே விரையுங்கள்..!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Director, Assistant Director, Personal Assistant, Assistant Section Officer, Stenographer, Senior Secretariat Assistant, Horticulture Supervisor, Senior Technician & Technical Assistant பதவிக்கு என மொத்தமாக 336 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால், விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் உடனே விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BIS பணியக வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் இந்திய தரநிலைகள் பணியகத்தில் Director, Assistant Director, Personal Assistant, Assistant Section Officer, Stenographer, Senior Secretariat Assistant, Horticulture Supervisor, Senior Technician & Technical Assistant ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 336 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் 10 / 12 / ITI / Diploma / டிகிரி படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்காக கல்வித் தகுதி குறித்து விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Director (Legal) பணிக்கு 56 வயது என்றும், Assistant Director பணிக்கு 35 வயது என்றும், Personal Assistant, Assistant Section Officer மற்றும் Assistant (Computer Aided Design) பணிக்கு 30 வயது என்றும், Senior Technician, Stenographer, Senior Secretariat Assistant, Horticulture Supervisor மற்றும் Senior Technician பணிக்கு 27 வயது என்றும், பணிக்கு தகுந்தாற்போல் 09.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை என்று தேர்வாகும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்றாற்போல் குறைந்து Level-2 (19900-63200) ஊதிய அளவு முதல் அதிகபட்சம் Level-2 (19900-63200) ஊதிய அளவு வரையும் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Exam, Practical / Skill Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SCs /STs /PWDs / Women and BIS serving employees ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் மட்டும் இப்பதிவின் கீழே உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 19.04.2022ம் தேதி முதல் 09.05.2022 ம் தேதி வரை மட்டுமே தங்களின் பதிவுகளை செய்து கொள்ள முடியும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் உடனே விரைந்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!