10, ITI & டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
10, ITI & டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
10, ITI & டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
10, ITI & டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director, Assistant Director, Personal Assistant, Assistant Section Officer, Stenographer, Senior Secretariat Assistant, Horticulture Supervisor, Senior Technician & Technical Assistant பதவிக்கு என மொத்தமாக 336 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Director, Assistant Director, Personal Assistant, Assistant Section Officer, Stenographer, Senior Secretariat Assistant, Horticulture Supervisor, Senior Technician & Technical Assistant.
பணியிடங்கள் 336
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BIS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் இந்திய தரநிலைகள் பணியகத்தில் Director, Assistant Director, Personal Assistant, Assistant Section Officer, Stenographer, Senior Secretariat Assistant, Horticulture Supervisor, Senior Technician & Technical Assistant ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 336 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

  • Director (Legal) – 01
  • Assistant Director (Hindi) – 01
  • Assistant Director – 02
  • Personal Assistant – 28
  • Assistant Section Officer – 47
  • Assistant (Computer Aided Design) – 02
  • Stenographer – 22
  • Senior Secretariat Assistant – 100
  • Horticulture Supervisor – 01
  • Technical Assistant – 47
  • Senior Technician – 19
BIS தகுதி விவரங்கள்:

கீழுள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் கொடுக்கப்பட்டுள்ள படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Director (Legal) பணிக்கு Bachelor‘s Degree in Law / LLB முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய / மாநில அரசின் கீழ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் பணிபுரிபவர்கள் அல்லது பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Director பணிக்கு Master‘s Degree / Post Graduate Diploma / MBA டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Personal Assistant பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் Shorthand test தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Assistant Section Officer பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor‘s Degree முடித்திருக்க வேண்டும். மேலும் Skill Test in Computer Proficiency முடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor‘s Degree in Science அல்லது Diploma in Engineering in Civil / Mechanical / Electrical முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது Autocad குறைந்தது 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Stenographer, Senior Secretariat Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor‘s Degree முடித்திருக்க வேண்டும்.
  • Horticulture Supervisor பணிக்கு 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • Technical Assistant பணிக்கு Bachelor’s Degree in Science முடித்திருக்க வேண்டும்.
  • Senior Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு அல்லது விண்ணப்பிக்கும் பணியின் பிரிவுக்கு ஏற்றார்ப்போல் ITI முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவின் துறையில் குறைந்தது 2 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
BIS வயது விவரங்கள்:
  • Director (Legal) பணிக்கு 56 வயது என்றும்,
  • Assistant Director பணிக்கு 35 வயது என்றும்,
  • Personal Assistant பணிக்கு 30 வயது என்றும்,
  • Assistant Section Officer பணிக்கு 30 வயது என்றும்,
  • Assistant (Computer Aided Design) பணிக்கு 30 வயது என்றும்,

  • Technical Assistant பணிக்கு வயது என்றும்,
  • Senior Technician பணிக்கு 27 வயது என்றும்,
  • Stenographer பணிக்கு 27 வயது என்றும்,
  • Senior Secretariat Assistant பணிக்கு 27 வயது என்றும்,
  • Horticulture Supervisor பணிக்கு 27 வயது என்றும்,
  • Senior Technician பணிக்கு 27 வயது என்றும், பணிக்கு தகுந்தாற்போல் 09.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மேற்கண்ட பணிகளுக்கு வயது தளர்வுகள், SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் என்றும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என்றும், Persons with Disabilities பிரிவினருக்கு 10 ஆண்டுகள் என்றும், Ex-Serviceman பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BIS ஊதிய விவரங்கள்:

Director (Legal) பணிக்கு Level-12 (Rs.78800- 209200) என்றும்,

  • Assistant Director பணிக்கு Level-10 (56100-177500) என்றும்,
  • Personal Assistant பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,
  • Assistant Section Officer பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,
  • Assistant (Computer Aided Design) பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,
  • Stenographer பணிக்கு Level-4 (25500-81100) என்றும்,
  • Senior Secretariat Assistant பணிக்கு Level-4 (25500-81100) என்றும்,
  • Horticulture Supervisor பணிக்கு Level-2 (19900-63200) என்றும்,
  • Technical Assistant (Laboratory) பணிக்கு Level-6 (35400-112400) என்றும்,
  • Senior Technician பணிக்கு Level-4 (25500-81100) என்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
BIS தேர்வு செயல்முறை:
  • Online Exam
  • Practical / Skill Test
  • Interview ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்களுக்கு அறிவிப்பில் பார்க்கலாம்.
BIS விண்ணப்ப கட்டணம்:
  • Assistant Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.800/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • மற்ற அனைத்து பணிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SCs /STs /PWDs / Women and BIS serving employees ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் Director (Legal)பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
BIS தேதி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 19.04.2022ம் தேதி முதல் 09.05.2022 ம் தேதி வரை மட்டுமே தங்களின் பதிவுகளை செய்து கொள்ள முடியும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான தேர்வுகள் இந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

BIS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் மட்டும் இப்பதிவின் கீழே உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Download BIS  Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!