இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் பயோ சென்சார் கருவிகள் – நிதியமைச்சர் தகவல்!

0
இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் பயோ சென்சார் கருவிகள் - நிதியமைச்சர் தகவல்!
இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் பயோ சென்சார் கருவிகள் - நிதியமைச்சர் தகவல்!
இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் பயோ சென்சார் கருவிகள் – நிதியமைச்சர் தகவல்!

இந்தியாவிலே முதல் முறையாக அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரான கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவியை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

பயோ சென்சார் கருவி:

கொரோனா நோயாளிகள் அதிக அளவில் இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ ஊழியர்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் தேவைப்படுகின்றனர். இதனால் கடந்த ஆண்டு முதல் பல்வேறு மருத்துவ பணியாளர்களை அரசு நியமித்து வருகிறது. மேலும், தொற்று நோயாளிகளை கவனித்துக் கொள்வதால் பல மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில், தொற்று நோயாளிகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் சிகிச்சை வழங்க இந்தியாவில் முதல் முறையாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் கரோனா நோயாளிகளின் உடல்நிலை கண்டறியும் அதி நவீன வயர்லெஸ் பயோ சென்சார் கருவி தொடக்க விழா நேற்று நடந்தது.

செப்.26 தமிழகத்தில் 3 வது சிறப்பு தடுப்பூசி முகாம் – மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வேண்டுகோள்!

நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமை மருத்துவர் ரத்தினவேலு போன்றவர்கள் கலந்து கொண்டனர். நிதியமைச்சர், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் அதிகமான நோயாளிகளை குறைவான பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது சிரமம். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தொற்று நோய் காலத்தில் அவசியமானது என்று கூறினார். தலைமை மருத்துவர், ஐசியூ போன்ற அவசர சிகிச்சை வார்டுகளில் 15 கரோனா நோயாளிகளை இந்த கருவிகளை கொண்டு ஒருவரே கண்காணிக்கலாம். இந்த கருவிகள் பேட்ஜ் மாதிரி இருக்கும். நோயாளியின் நெஞ்சுபகுதியில் ஓட்ட வேண்டும். ப்ளூடூத் டிவெஸ் வைத்து இன்டர்நெட் மூலம் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை வழங்கலாம் என்று கூறினார்.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

இந்த வயர்லெஸ் கருவியின் மூலம் நோயாளியின் சுவாசம், இதய துடிப்பு, ஆக்ஸிசன் அளவு, வெப்ப நிலை உள்ளிட்ட 6 விதமான உடல்நிலை பயன்பாட்டை அறிந்து கொள்ள முடியும். மருத்துவமனையில் உள்ள நர்ஸிங் ஸ்டேடனில் வைத்து கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து நோயாளிக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியும். இந்த கருவி நோயாளியின் உடலில் பொருத்துவதால் எந்தவொரு பிரச்சினை ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here