1 முதல் 10ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர்!

0
1 முதல் 10ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர்!
1 முதல் 10ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர்!
1 முதல் 10ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர்!

கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 2வது வாரம் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா 2வது அலை பரவலை தடுக்க மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது. தினசரி பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக முடிவெடுத்தால் முதலில் தொடக்கப் பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் சில மாநிலங்களில் 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

4 மணிநேரம் வேலை, மாதம் ரூ.60,000 சம்பளம் – முழு விபரம் இதோ!

தற்போது பீகாரில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் விஜய்குமாரின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் பல்வேறு வகுப்புகளுக்கான பள்ளிகள் இப்போது மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 6க்குப் பிறகுதான், மாநிலத்தில் இன்னும் சில தளர்வுகள் வழங்கப்படும், அதன் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சமீபத்தில் பீகாரில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனுடன் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த விதிகளின்படி, மாற்று நாட்களில் மட்டுமே மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். COVID-19 தடுப்பூசியின் ஒரு டோஸ் அவசியம், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி போன்ற பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டியது முக்கியம்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here