டான்ஸ் டாஸ்கில் மாஸ் காட்டிய விக்ரமன்.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள் – BigBoss சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ்!

0
டான்ஸ் டாஸ்கில் மாஸ் காட்டிய விக்ரமன்.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள் - BigBoss சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ்!
டான்ஸ் டாஸ்கில் மாஸ் காட்டிய விக்ரமன்.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள் – BigBoss சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டின் தலைவராக ஜிபி முத்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் யாரும் எதிர்பாராத விதத்தில் விக்ரமன் நடனம் ஆடி இருக்கிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 10 நாட்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 21 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், பலர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வார தலைவராக ஜிபி முத்து இருக்கிறார். அவர் ஜனனி உடன் போட்டி போட்டு தலைவர் பதவியை பெற்றார். தற்போது போட்டியாளர்கள் தங்களது சொந்த கதையை சொல்லி அதன் மூலம் நாமினேஷனில் இருந்து தப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அது மட்டுமில்லாமல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் போட்டியாளர்கள் இருவர் நடனம் ஆட வேண்டும் என்ற டாஸ்க் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. அதில் பலர் தங்களுடைய திறமையை காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வீட்டின் நாமினேஷன் டாஸ்கில் அதிகமாக ஓட்டுக்களை வாங்கி நாமினேட் ஆனவர் விக்ரமன். அவர் சில டாஸ்குகளிலும் சரியாக கலந்து கொள்ளவில்லை என்ற புகார் இருக்கிறது. தற்போது டான்ஸ் டாஸ்கில் அவர் விஜே கதிருடன் போட்டி போடுகிறார்.

ராதிகாவின் கொடுமை தாங்காமல் அடிக்க கை ஓங்கிய கோபி – மூன்றே நாட்களில் வந்த விரிசல்!!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் விக்ரமன் வெளியே நிற்க பாடல் ஒலித்ததும் வேகமாக ஓடி வந்து அவர் ஆடிய நடனத்தை பார்த்து விஜே கதிர் ஆச்சரியப்படுகிறார். அந்த அளவிற்கு அருமையாக விக்ரமன் நடனம் இருந்தது. அவருடைய நடனத்தை பார்த்து ஷாக்கான போட்டியாளர்கள் அவருக்கு அதிகமான வாக்குகளை கொடுத்தனர். மேலும் நீங்க இப்படி ஆடுவீங்க என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என பெருமையாக சொல்லி இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!