முதல் நாளே பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.. ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ் – எதிர்பார்ப்பை தூண்டும் சீசன் 6!!

0
முதல் நாளே பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.. ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ் - எதிர்பார்ப்பை தூண்டும் சீசன் 6!!
முதல் நாளே பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.. ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ் - எதிர்பார்ப்பை தூண்டும் சீசன் 6!!
முதல் நாளே பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்.. ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ் – எதிர்பார்ப்பை தூண்டும் சீசன் 6!!

விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நேற்று பிரமாண்டமாய் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 20 போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் முதல் நாளே டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் டாஸ்க்:

தமிழ் சின்னத்திரையில் பலரின் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. பல மொழிகளில் வெற்றிக் கண்ட இந்த நிகழ்ச்சியின் தமிழ் சீசன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதுவரை ஐந்து சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று (அக். 9) பிரமாண்டமாய் தொடங்கப்பட்டது. இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுப்பாளர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் 20 போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து அனுப்பி வைத்தார். அவர்களில் பலர் புது முகங்களாக இருந்தனர். மேலும் ஒரு சில தெரிந்த பிரபலங்கள் இருப்பதால் இந்த சீசன் அதிக எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. இந்நிலையில் நேற்று 20 போட்டியாளர்களிடம் பேசிய பிக் பாஸ் முதல் நாளே டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் முதல் நாளே சுவாரசியம் இல்லாத 4 போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும், அவர்கள் வீட்டிற்குள் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிட்டுருந்தார்.

சவாலில் வெற்றி பெற்ற கதிர், கொடைக்கானல் கிளம்பும் மூர்த்தி குடும்பம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

முதல் நாளே இப்படி ஒரு டாஸ்க்கா என போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போட்டி என்று வந்துவிட்டால் இறங்கி விளையாட வேண்டும் என்பதால், போட்டியாளர்களில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். VJ விக்ரமன், இலங்கை பெண் ஜனனி உள்ளிட்ட 4 பேர் அடுத்த வார நாமினேஷன் லிஸ்டில் நேரடியாக இடம் பெற்றுள்ளனர். வழக்கமான சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் முதல் நாளே இப்படி ஒரு டாஸ்க் கொடுத்ததால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!