Bigg Boss Tamil Season 5 Today – Promo 2 | தாமரையிடம் சண்டையிடும் நமீதா மாரிமுத்து!

0
Bigg Boss Tamil Season 5 Today - Promo 2 | தாமரையிடம் சண்டையிடும் நமீதா மாரிமுத்து!
Bigg Boss Tamil Season 5 Today - Promo 2 | தாமரையிடம் சண்டையிடும் நமீதா மாரிமுத்து!
Bigg Boss Tamil Season 5 Today – Promo 2 | தாமரையிடம் சண்டையிடும் நமீதா மாரிமுத்து!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில், ஐந்தாவது நாளான இன்று நடைபெறும் காட்சிகள் குறித்த இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டு இன்று ஐந்தாவது நாளில் அடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்றைய எபிசோடில் திருநங்கை நமிதா வாழ்வில் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தையும் கண்ணீருடன் சொன்னார். அதை பார்த்த மற்ற போட்டியாளர்களுக்கும் கண்ணீர் வராமல் இல்லை. ராஜு முதல் பிரியங்கா வரை அனைவரும் சோகத்தில் மூழ்கினர். மேலும் அனைவரும் அவருக்கு ஹார்ட் கொடுத்தனர்.

வெண்பாவுடன் சேர்ந்த கண்ணம்மா, சீரியலில் புதிய திருப்பம் – ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு புகைப்படம்!

தற்போது இன்றைய எபிசோடிற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நமீதா வருணிடம் இன்னைக்கு பெரிய சண்டை இருக்கிறது என கோவமாக பேசுகிறார். அவர் தாமரையிடம் நீ 40 குழந்தை இல்லை 400 குழந்தை கூட வளர்ப்பாய் என சிரித்துக் கொண்டே சொன்னீங்க, இருக்கு உங்களுக்கு என கோவமாக மிரட்டுவது போல இருக்கிறது. அதை பிரியங்காவிடம் அவர் இரவு தூங்கும் போது சொல்ல, பிரியங்கா இனிமேல் அவர் முன்னால் சிரிக்காதீங்க என சொல்கிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ராதிகாவின் கர்ப்பகால புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

மறுநாள் அண்ணாச்சியிடம் அவர் நடந்ததை சொல்லி நான் இப்படி சொன்னேன் அது தவறா என கேட்கிறார். உங்க ஊர் பக்கம் பாஷையில் சொன்னால் சில சமயம் புரியாமல் கூட இருக்கும், நான் எதாவது சமாதானம் செய்து வைக்கவா என கேட்கிறார். வேண்டாம் நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என தாமரை சொல்ல, அண்ணாச்சி நமீதாவை அழைத்து உட்கார சொல்கிறார். ஆனால் நமீதா எனக்கு இங்கே அமர்ந்து பேச விருப்பமில்லை என சொல்லி கையெடுத்து கும்பிடுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!