முதல் நாளே மாஸ் காட்டிய தலைவன் ஜிபி முத்து.. பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

0
முதல் நாளே மாஸ் காட்டிய தலைவன் ஜிபி முத்து.. பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
முதல் நாளே மாஸ் காட்டிய தலைவன் ஜிபி முத்து.. பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
முதல் நாளே மாஸ் காட்டிய தலைவன் ஜிபி முத்து.. பிக்பாஸ் சீசன் 6 ப்ரோமோ ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று ஹவுஸ்மேட்ஸ் செய்யும் அட்டகாசம் குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஜிபி முத்துவின் காமெடி காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் ப்ரோமோ:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று தொடங்கப்பட்டது முதல், மக்கள் மத்தியில் கடந்த சீசன்களை போல இந்த சீசனிற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனில் பல அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சில போட்டியாளர்களின் என்ட்ரி தான் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு கிராமத்தில் டிக்டாக் செய்து கொண்டிருந்த ஜிபி முத்து, தற்போது பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

நேற்றைய எபிசோடில் முதல் ஆளாக வந்த அவர், நான் தனியாக இருக்கமாட்டேன் என கமல் சாரிடம் பேசியது, ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் உள்ள 19 போட்டியாளர்கள் யார் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்த 19 பேருக்கும் அவரை தெரிந்து இருப்பது தான், அவரின் கூடுதல் சிறப்பு. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோட் குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமாக்ஸ் இது தானா? வெளியான தகவல்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில், தலைவர் ஜிபி முத்து தனது பிக் பாஸ் குடும்பத்தினரிடம் நான் மிகவும் சந்தோசமாக இருக்கேன் என சொல்கிறார். அதன் பின் சென்று தூங்கிவிடுகிறார். அதனால் முதல் நாளே வீட்டில் நாய் குரைக்க, பயந்து சென்று நாய் குரைப்பதாக சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவரை பயப்படாமல் இருக்க சொல்ல, ஆனால் ராபர்ட் மாஸ்டர் மீண்டும் ஜிபி முத்துவை பயம் காட்டுகிறார். உடனே வெளியே சென்று கொட்டும் மழையில் ஜிபி முத்து படுக்க, பின் நகைச்சுவையாக அவர் ஆடும் நடனத்தை பார்த்து மற்ற போட்டியாளர்கள் ரசிப்பது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!