பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் ஆண் போட்டியாளர் – லீக்கான தகவல்!

0
பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் ஆண் போட்டியாளர் - லீக்கான தகவல்!
பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் ஆண் போட்டியாளர் - லீக்கான தகவல்!
பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் ஆண் போட்டியாளர் – லீக்கான தகவல்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது வரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 9ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஐந்தாவது வாரமாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதலில் 21 போட்டியாளர்களை கொண்டு துவங்கிய நிலையில் கடந்த வாரங்களில் ஜி.பி.முத்து, சாந்தி, ஷெரினா, அசல் ஆகிய நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்பது தொடர்பான தகவல் தற்போது லீக்காகி உள்ளது.

சன் டிவியில் ப்ரைம் டைமில் களமிறங்கும் நடிகை ஆலியா மானசாவின் புது சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

Exams Daily Mobile App Download

இந்த வாரம் விக்ரமன், அசிம் ,ADK, ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஷ்வரி உள்ளிட்டவர்கள் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் அசிம், விக்ரமன் டாப் ஓட்டிங் பெற்று safe zone-ல் உள்ளார்கள். மேலும் இதில் ராம், தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் குறைவான எண்ணிக்கையில் ஓட்டுகளை பெற்று danger zone-ல் உள்ளனர். இந்த மூவரில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ராம் தான் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ராம் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் மிக்ஸர் சாப்பிடுவதாக ரசிகர்கள் கலாய்க்கும் வேளையில் அவர் பிக் பாஸ் வீட்டில் தொடருவாரா அல்லது வெளியேற்றப்படுவாரா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!