அசிம் பொறுமையை சோதிக்கும் மகேஸ்வரி.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம் – வைரல் ப்ரோமோ!

0
அசிம் பொறுமையை சோதிக்கும் மகேஸ்வரி.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம் - வைரல் ப்ரோமோ!
அசிம் பொறுமையை சோதிக்கும் மகேஸ்வரி.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம் - வைரல் ப்ரோமோ!
அசிம் பொறுமையை சோதிக்கும் மகேஸ்வரி.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம் – வைரல் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இன்று முதல் நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. கமல் சார் அசிமை சண்டை போட கூடாது என கண்டித்து இருக்கிறார். ஆனாலும் இன்றைய எபிசோடில் அசிமை மகேஸ்வரி சண்டைக்கு கூப்பிடுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. சென்ற வார எபிசோட் முழுவதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. மேலும் அசிம் சக போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டார். அதனால் கோவப்பட்ட கமல் சார் அசிமை பயங்கரமாக கண்டித்தார். அதனால் இந்த வாரம் சண்டைக்கு அசிம் போகமாட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கை பார்த்தால், அசிம் கோவத்தை வேண்டும் என்றே கிளப்புவது போல இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதாவது பிக்பாஸ் தற்போது டிவி டாஸ்க் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு நகைச்சுவையாக சில டாஸ்க் கொடுத்தாலும், வாக்குவாதம் செய்வது போல டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சும்மாவே போட்டியாளர்களுக்கு இடையே பயங்கர சண்டை வரும்.. இதில் வாக்குவாதம் செய்தால் சொல்லவே வேண்டாம் என்பதால், இன்றைய எபிசோடில் சண்டை இருப்பது உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அசிம் பொதுவான ஒரு விஷயத்தை பற்றி மகேஸ்வரியிடம் சொல்கிறார். ஆனால் மகேஸ்வரி நீங்க ஜட்ஜ் மாதிரி என்னிடம் வந்து பேசாதீங்க என சொல்ல, உடனே அசிம் கோவத்தை கண்ட்ரோல் செய்கிறார்.

பிரெஞ்ச் அரசின் ‘செவாலியர் விருது’ பெற்ற கர்நாடக பாடகி அருணா சாய்ராம் – குவியும் வாழ்த்துக்கள்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் நீங்க உங்க வேலையை சரியாக செய்தால் போதும் என மகேஸ்வரி சொல்கிறார். உடனே அசிம் எங்க வேலையை நான் சரியாக தான் செய்கிறோம் , வெளியே போய் கத்துங்க, ஒருத்தவரை பிடித்துக் கொண்டு அவரை குறை சொல்லி கத்த வேண்டியது வேற எதாவது உங்களுக்கு தெரிகிறதா என சொல்லிவிட்டு அவர் கிளம்பி செல்கிறார். அசிம் எவ்வளவு தூரம் தன்னுடைய கோவத்தை கண்ட்ரோல் செய்வார் என்பது எல்லாம் இன்றைய எபிசோடில் காட்டப்பட இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!