தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகின்றது. இதில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து வெளியான அறிக்கையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் , 10 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ ஐடிஐ, கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம். இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநா்கள் சுய தொழில் செய்வதற்கு ஏற்ப கடனுதவிகள் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும்.
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ள வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற பயன்பெறலாம். இதையடுத்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.
I will try it