‘பிக் பாஸ்’ தாமரைக்காக வருண் செய்த மறக்க முடியாத செயல் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
'பிக் பாஸ்' தாமரைக்காக வருண் செய்த மறக்க முடியாத செயல் - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
'பிக் பாஸ்' தாமரைக்காக வருண் செய்த மறக்க முடியாத செயல் - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
‘பிக் பாஸ்’ தாமரைக்காக வருண் செய்த மறக்க முடியாத செயல் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆன தாமரை செல்வி தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். தற்போது தாமரை வருண் பற்றி கூறிய செயல் அனைவரையும் வியக்க வைக்கிறது.

வருணின் செயல்:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் சமீபத்தில் தான் ஒளிபரப்பாகி முடிந்தது. இந்தமுறை இதுவரை இல்லாத பல மாற்றங்கள் நடந்தது. மிகவும் பரபரப்பாக இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியினை சுவாரஸ்யமாகியவர்களில் முக்கியமானவர் தாமரை செல்வி. பொதுமக்களில் இருந்து ஒருவராக பிக் பாஸ் நிகழ்ச்சியினை பற்றி ஏதும் தெரியாமல் வந்தவர். ஏதேனும் அறிவிப்பு பிக் பாஸிடம் இருந்து வந்தால் அது பற்றி மற்ற போட்டியாளர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வார்.

Bigg Boss Ultimate Promo – வனிதா & சுரேஷ் சர்க்கரவர்த்திக்கு இடையில் முற்றிய வாக்குவாதம்! சினேகன் வெளிநடப்பு!

இவர் 2,3 வாரங்கள் தான் நிகழ்ச்சியில் இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை வந்து தாமரை பலரையும் வாயடைக்க வைத்தார். தற்போது தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தாமரை சீசன் 5ல் அக்ஷரா மற்றும் வருண் இருவரிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார். இவர்கள் 3 வரின் நட்பு மிகவும் பேசப்பட்டது.

‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொள்ளும் ஓவியா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளில், தாமரை வருண் தனக்கு கருப்பு நிற டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் ஓவன் போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளாராம். இது பற்றி தாமரை மிகவும் பெருமையாக கூறியுள்ளார். இதனால் வருணின் அன்பை பற்றி அறிந்தவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்பும் வருண் தாமரைக்கு இந்த அளவுக்கு உதவியது குறித்து பலரும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!