அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் ஷோவின் வின்னர் இவர் தான் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் ஷோவின் வின்னர் இவர் தான் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் ஷோவின் வின்னர் இவர் தான் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் ஷோவின் வின்னர் இவர் தான் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ரியாலிட்டி ஷோவுக்கு பஞ்சமில்லாத விஜய் டிவி யில் ஆரம்பமாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் 70 நாட்களை கடந்து நிறைவுக்கு வந்துள்ள இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. அதில் வாலிப பெண்களின் கனவு கண்ணன் வின்னர் கோப்பையை தட்டி அடித்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் ஷோ:

விஜய் டிவி தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மக்களை என்டேர்டைன் செய்வதற்க்காக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 24 மணி நேரமும், 70 நாட்கள் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் ஷோவில் கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் கலந்து கொண்டு ஒளிபரப்பாகி வந்தது.

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் புது முகங்கள் – சீரியலில் புதிய திருப்பங்கள்!

பிக் பாஸ் ஷோக்கு கிடைத்த ரீச் அளவுக்கு இந்த ஷோவுக்கு ரீச் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த ஷோ வந்ததும் தெரியவில்லை, அதில் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அந்த அளவிற்கு இருந்த இடம் தெரியாமல் தற்போது ஷோ எண்டுக்கு வந்துள்ளது. மேலும், குறிப்பாக இந்த ஷோவை தொகுப்பாளர் கமலுக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்புக்காகவே பலரும் பார்த்து வந்தனர். தற்போது ஷோ முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

உடனே ஷோ முடிவுக்கு வருவதால் தான் சோகம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். ஏனென்றால் அந்த சோகத்துக்கு காரணமே சிம்புவை இனி ஜாலியாக வாரா வாரம் பார்க்க முடியாதே என்ற ஒரு ஏக்கத்தால் தான். இந்நிலையில் 70 நாட்களை கடந்து நிறைவுக்கு வந்துள்ள இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் பாலா, நிரூப், ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இடையே தான் கடும் போட்டி இருந்தது. மேலும் அதில் அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here