“தாமரை ஜெயிலுக்கு போகணும்” சண்டையை கிளப்பும் வனிதா – “பிக்பாஸ்” அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!

0
"தாமரை ஜெயிலுக்கு போகணும்" சண்டையை கிளப்பும் வனிதா - "பிக்பாஸ்" அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!
“தாமரை ஜெயிலுக்கு போகணும்” சண்டையை கிளப்பும் வனிதா – “பிக்பாஸ்” அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மூன்றாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அதில் சுவாரஸ்யம் குறைவான நபர்களில் தாமரை பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை ஜெயிலில் அடைக்க வேண்டும் என வனிதா சொல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பல மொழிகளில் ரசிக்கப்பட்ட ஒரு ரியாலிட்டி நிகழிச்சியான பிக்பாஸ் தமிழில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. கடைசி சீசன் சென்ற மாதம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் ரசிகர்களுக்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் முதல் வாரம் 14 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் அவர்களில் சுரேஷ் தாத்தா வெளியேறினார். அதன் பின் இரண்டாவது வாரம் நடிகை சுஜா வெளியேறினார். தற்போது மூன்றாவது வாரத்தில் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் நாளைய எபிசோடில் வெளியேற இருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்குகளில் சுவாரசியம் குறைவாக உள்ள போட்டியாளர் யார் என தேர்வு செய்து அவர்களுக்கு தண்டனைகளை நீங்களே வழங்கலாம் என பிக்பாஸ் அறிவித்தார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் தனம் – ரசிகர்கள் ஷாக்!

அதில் அதிகமானோர் தாமரை பெயரை சொன்னார்கள். தாமரையை ஜெயிலில் அடைக்க வேண்டும் என வனிதா தண்டனை சொன்னார். அதனால் கோவப்பட்ட தாமரை நாங்க சரியாக விளையாடவில்லை அதனால் நான் ஜெயிலுக்கு போக வேண்டும், வீட்டில் வெளியே தூங்க வேண்டும் நீங்க எல்லாரும் நன்றாக விளையாடுனீங்க என வனிதாவை பார்த்து கேட்கிறார். அதனால் இன்றைய எபிசோடில் வனிதா தாமரை சண்டையை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here