திருமணம் முடிந்தும் தாலி போடாமல் இருக்கும் “பிக்பாஸ் தாமரை” – அவரே சொன்ன விளக்கம் !

0
திருமணம் முடிந்தும் தாலி போடாமல் இருக்கும்
திருமணம் முடிந்தும் தாலி போடாமல் இருக்கும் "பிக்பாஸ் தாமரை" - அவரே சொன்ன விளக்கம் !
திருமணம் முடிந்தும் தாலி போடாமல் இருக்கும் “பிக்பாஸ் தாமரை” – அவரே சொன்ன விளக்கம் !

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் தாமரை செல்வி, தற்போது அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் நிலையில் அதில் தாலி அணியாமல் இருப்பது குறித்து ஜூலியிடம் விளக்கி இருக்கிறார்.

பிக்பாஸ் தாமரை:

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வெற்றி நிகழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்து இருக்கின்றனர். ஐந்தாவது சீசனில் பல புது முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவர்களில் ஒருவர் தான் தாமரை செல்வி. அவர் ஒரு நாடக கலைஞர் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய எதார்த்தமான குணத்தால் அவர் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் வரை இருந்தார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தியை முந்திய தனம் – சம்பள விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

அதன் பின் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு மக்களிடம் கிடைத்தது. இந்நிலையில் தாமரை தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றார். அந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் நேரலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் போட்டியாளர்கள் குணத்தை பற்றி வெளிப்படையாக தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் கணவர் மகனுக்கு கொடுத்த பரிசு – வைரலாகும் வீடியோ!

அதில் ஜூலி தாமரையிடம் திருமணம் முடிந்தும் ஏன் தாலி போடவில்லை என கேட்கிறார். அதற்கு தாமரை நாங்க திருமணம் செய்து கொள்ளும் போது கவரிங் தாலி தான் வாங்கி போட்டிருந்தேன். ஆனால் அதன் பின் கவரிங் சேராமல் இருந்ததால் அதை கழட்டிவிட்டேன். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே போகும் போது தான் தங்கத்தில் தாலி வாங்க வேண்டும் என விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் சொன்னது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here