விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் விவரம் – வெளியான பட்டியல்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்கள் விவரம் - வெளியான பட்டியல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்கள் விவரம் - வெளியான பட்டியல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் விவரம் – வெளியான பட்டியல்! ரசிகர்கள் ஷாக்!

தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த சூழலில் இந்த பட்டியலில் சிலர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியை சார்ந்த புதுப்புது விஷயங்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. வழக்கம் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். எல்லா சீசன்களை போலவே இந்த சீசனும் சண்டை, சச்சரவுகள், காதல், மோதல், நட்பு, அன்பு, கோபம் என அனைத்து குணங்களும் அடங்கிய கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பாண்டிச்சேரியில் ஊர் சுற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா – வைரல் வீடியோ!

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் எப்போதும் ரகசியமாக வைக்கப்படுவது உண்டு. ஆனால் சினிமா உலகில் சுவர்களுக்கும் காதுகள் இருப்பது போல, போட்டியாளர்கள் குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்து விடுகிறது. அந்த வகையில் இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5லும் பல ஸ்வாரஸ்யமான போட்டியாளர்கள் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது சினிமா பிரபலங்கள் தவிர திருநங்கைகள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இதனுடன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஒப்பந்தமும் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சீசன் 5ல் மிலா, நமீதா என்ற இரு திருநங்கைகளில் ஒருவர் கலந்து கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நமீதா பிக்பாஸ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வில்லா டூ வில்லேஜ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 ஆவது இடத்தை பிடித்த அக்ஷிதா ஷெட்டியும் பிக்பாஸ் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யாவின் மகளும் பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

இவர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்தின் நண்பர் நிரூப், நிழல்கள் ரவி ஆகியோரும் பிக்பாஸ் செல்வதாக கூறப்பட்டு வருகிறது. தவிர GP முத்து வைல்ட் கார்டு போட்டியாளராக செல்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜே பிரியங்கா கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல அல்லாது, இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளில் ஆடியன்ஸ் அனுமதிக்கப்பட உள்ளனர். அதிலும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!