விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் ‘பிக் பாஸ் சீசன் 6’ – ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் 'பிக் பாஸ் சீசன் 6' - ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் 'பிக் பாஸ் சீசன் 6' - ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
விஜய் டிவியில் விரைவில் தொடங்கும் ‘பிக் பாஸ் சீசன் 6’ – ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தமிழ் தொலைக்காட்சியில் மற்ற சேனல்களை காட்டிலும் டிஆர்பியில் விஜய் டிவி தான் மிகவும் சிறப்பான சேனல் என்ற பெருமையை வாங்கி கொடுத்த ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் ஷோ தான். ஐந்து சீசன்களை கடந்த இந்த ஷோவின் ரசிகர்கள் 6வது சீசனுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது அவை தொடங்கவுள்ள தேதி விவரம் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்:

விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மக்களை என்டேர்டைன் செய்வதற்காக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக 2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக வந்து உலக அளவில் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வரும் ஒரு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இதில் ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டியாளர்கள் பங்கு பெறுவார்கள். அவர்கள் 100 நாட்களும் இருந்து ஒவ்வொருவரின் உண்மை சுயரூபங்களை வெளிக்கொணரும் வகையில் வீட்டை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய அறிவிப்பு!

இவ்வாறு சீசன் 1, 2, 3, 4 அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் அடுத்ததாக கடந்த ஆண்டு சீசன் 5 தொடங்கி அதுவும் வெற்றி பாதையில் முடிவடைந்தது. மேலும் புது விதமாக முயற்சி எடுக்கும் வகையில் விஜய் டிவி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் வீட்டிற்குள் நடப்பதை காணும் விதமாக பிக் பாஸ் அல்டிமேட் ஷோ வும் தொடங்கி 70 நாட்களை கடந்து முடிவடைந்தது. அல்டிமேட் ஷோவில் பங்கு கொண்ட போட்டியாளர்கள் எல்லோருமே அதிரடி சரவெடியாக வெடிப்பவர்கள் தான். ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பு காணப்படவில்லை. தினமும் இரவுவரை காத்திருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அட்ராசிட்டிகள், சுவாரஸ்யங்களை பார்க்கவே ரசிகர்கள் அதிகமாக விரும்பினர்.

அதனால் சீசன் 6க்கு காத்திருந்த ரசிகர்களுக்காக தற்போது பிக் பாஸ் சீசன் 6 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அடுத்த ஆண்டு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்டில் இந்த நிகழ்ச்சி மீண்டும் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் அவர்கள் இடையிலேயே ஷோவை விட்டு சென்றதால் அவர் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? அல்லது சிம்புவே நிகழ்ச்சியை தொடர்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!