பிக் பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பம் – வனிதாவையே மிஞ்சும் அளவிற்கு முக்கிய போட்டியாளர் தேர்வு!

0
பிக் பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பம் - வனிதாவையே மிஞ்சும் அளவிற்கு முக்கிய போட்டியாளர் தேர்வு!
பிக் பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பம் - வனிதாவையே
பிக் பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பம் – வனிதாவையே மிஞ்சும் அளவிற்கு முக்கிய போட்டியாளர் தேர்வு!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

பிக் பாஸ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாக கிடைத்ததன் காரணமாக தற்போது வரைக்கும் ஐந்து சீசன்கள் நிறைவடைந்துவிட்டது. சீசன் 5 ஐ தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பப்பட்டது. எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் என பல கலைகளில் இருப்பவர்களை தேர்வு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு சண்டையிடும்படியான டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு வருகின்றனர். 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியையும் மக்கள் எந்தவித கடுப்பும் இல்லாமல் கண்டு ரசித்து வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், யார் யாரெல்லாம் இந்த சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டுமா? கோயம்புத்தூர் மக்களுக்கான அரிய வாய்ப்பு!

முக்கிய போட்டியாளராக சீசன் 6 இல் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அதில் முக்கியமாக சீசன் 6 நிகழ்ச்சியில் டி. இமானின் முதல் மனைவியான மோனிகா கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே டி இமான் மோனிகாவை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து பெற்று சில நாட்களிலேயே திருமணம் செய்துகொண்ட விரக்தியில் மோனிகா கண்டபடி சமூக வலைப் பக்கங்களில் இமானை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சண்டைக்கு பஞ்சமே இருக்காது. எனவே மோனிகா கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜூலை மாதத்தின் இறுதிக்குள் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here