பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாதா.. ஜிபியை பங்கமாய் கலாய்த்த கமல் – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

0
பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாதா.. ஜிபியை பங்கமாய் கலாய்த்த கமல் -
பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாதா.. ஜிபியை பங்கமாய் கலாய்த்த கமல் - "பிக்பாஸ் சீசன் 6" ப்ரோமோ!
பாதாம் தெரியும்.. ஆதாம் தெரியாதா.. ஜிபியை பங்கமாய் கலாய்த்த கமல் – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் முதல் வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கமல் ஹவுஸ்மெட்ஸிடம் பேசும் மாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஜிபி முத்துவை கமல் கலாய்க்க அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

பிக் பாஸ் ப்ரோமோ:

பிக் பாஸ் நிகழ்ச்சி சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டு ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. 20 மாறுபட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அனுப்பப்பட்டனர். முதல் நாளே பிக் பாஸ் வித்தியாசமான டாஸ்க் கொடுத்து 4 போட்டியாளர்களை வெளியே தூங்க வைத்தார். அதன் பின் தனி தனி டீம்மாக பிரித்து அதில் பல டாஸ்குகளை கொடுத்து, சலசலப்பை ஏற்படுத்தினார்.

பெண் குழந்தைக்கு தாயான சன் டிவி சீரியல் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

Exams Daily Mobile App Download

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சண்டைகள் எதுவும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் அப்படி எதுவும் இல்லாமல் வந்த முதல் நாளே சண்டைகள் கிளம்பிவிட்டது. மகேஸ்வரி, அசிம் மற்றும் ஜிபி முத்து, தனலட்சுமி இடையே சண்டை வந்துள்ளது. அதனால் முதல் வாரமே சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் சார் வந்திருக்கிறார். அவர் முதலில் சாந்தியிடம் உப்புமா கொடுத்தது பற்றி பேசுகிறார். அடுத்ததாக அவர் மகாலட்சுமியிடம், அடிக்கடி முட்டிக்கிறீர்கள் என சாடையாக பேசுகிறார். அதன் பின் ஜிபி முத்துவிடம் வந்த அவர், உங்களுக்கு ஒரு பொருள் இருக்கிறது என சொல்ல, ஜிபி முத்து அதை பார்த்து பாதாம் என சொல்கிறார். பாதாம் தெரிகிறது, ஆதாம் தெரியாதா, அவர் எவ்வளவு வருத்தப்படுகிறார் என சொல்ல, ஜிபி முத்துவிற்கு எதுவும் புரியாமல் ஆதாம் எங்கே இருக்கிறார் என கேட்கிறார். அந்த ப்ரோமோ பார்த்து ஜிபி முத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!