ரெடின் கிங்ஸ்லி முதல் ரவீனா வரை – விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்!

0
ரெடின் கிங்ஸ்லி முதல் ரவீனா வரை - விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்!
ரெடின் கிங்ஸ்லி முதல் ரவீனா வரை - விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்!
ரெடின் கிங்ஸ்லி முதல் ரவீனா வரை – விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜூலை மாதத்தில் இருந்து விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்தான தகவல்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலேயே மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றனர். பலருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு திரைப்பட, சீரியல் வாய்ப்புகள் என வாழ்க்கையே மாறியிருக்கிறது. ஆனால் பலருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக வாழ்க்கையையே தொலைத்திருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மொத்தமாக 5 சீசன்களை கடந்து விட்டது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட சோகம் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

இது மட்டுமல்லாமல் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்தும் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியை நடத்தினர். 24 மணிநேரமும் மக்கள் பார்க்கும் படி லைவ்வாக ஒளிபரப்பப்பட்டது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. யார் யாரெல்லாம் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பது குறித்தான தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனா சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் முன்னாள் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் சீரியல் நடிகை சரண்யா, பிரபல காமெடியன் ரெடின் கிங்ஸ்லே, தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகன் வினோத் பாபு, சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஸ்ரீ நிதி, பூனம் பாஜ்வா ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!